இந்திய ரயில்வேயின் பரபரப்பான வழித்தடங்களில் ரயில் டிக்கெட்டுகளைப் பெறுவது எளிதல்ல. பெரும்பாலான மக்கள் தத்கால் டிக்கெட்டுகள் மீது அதிக நம்பிக்கை கொண்டு காத்திருக்கிறார்கள். தத்கால் டிக்கெட்டுகளை ஏசி வகுப்பிற்கான பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாக காலை 10 மணிக்கு முன்பதிவு செய்யலாம். ஸ்லீப்பர் வகுப்பிற்கு காலை 11 மணிக்கு முன்பதிவு செய்யலாம். தத்கால் டிக்கெட்டுகள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் அவற்றின் தேவை எப்போதும் மிக அதிகமாகவே இருக்கிறது.
எனவே, இந்த டிக்கெட்டுகளை வெற்றிகரமாக முன்பதிவு செய்வது எளிதானதாக இருப்பதில்லை. இருப்பினும், சில ட்ரிக்குகளை பயன்படுத்தினால், IRCTC-யில் எளிதாக தத்கால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். அவை என்ன என்பதை இங்கே காணலாம்.
பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களின் விவரங்களை முன்னரே சேவ் செய்து வைக்கக்கூடிய பட்டியல்தான் மாஸ்டர் பட்டியல் எனப்படுகிறது. IRCTC இணையதளத்தில் விவரங்களை மாஸ்டர் பட்டியலில் சேமிக்கவும். பயணிகளின் விவரங்களை IRCTC கணக்கின் ‘My Profile Secton’-ல் சேமிக்கலாம். இப்படி செய்வதன் மூலம், பயணிகளின் விவரங்களை நிரப்ப ஒரே ஒரு கிளிக் மட்டுமே தேவைப்படும். இதனால் உங்கள் நேரமும் மிச்சமாகும்.
IRCTC டிக்கெட் முன்பதிவு கட்டணம் செலுத்துவதற்கான விரைவான ஆப்ஷனாக இணைய வங்கி வசதி கருதப்படுகிறது. இருப்பினும், நீங்கள் விரும்பினால், பணம் செலுத்துவதற்கு, OTP தெவைப்படாத கட்டண வகைகளையும் நீங்கள் தேர்வு செய்யலாம். இ-வாலட், பேடிஎம் மற்றும் யுபிஐ போன்றவை இதற்கு உதவும். இவை விரைவான டிக்கெட் முன்பதிவிற்கு உதவும்.
டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு அதிவேக இணைய வசதி தேவை. ஏனெனில், இந்த வலைத்தளம் லோட் ஆக அதிக நேரம் எடுக்கும். இணையத்தின் வேகம் குறைவாக இருந்தால், முன்பதிவு செய்வதில் error ஏற்படும். Error வந்தால், டிக்கெட் கட்டணம் செலுத்தும் செயல்முறை தோல்வியடையக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவதில்லை.
தத்கால் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு நீங்கள் வேகமாக செயல்படுவதும் மிக முக்கியம். எந்த டேப் எங்குள்ளது, வழிமுறைகளை எவ்வாறு பின்பற்றுவது ஆகிய விஷயங்களில் கவனம் தேவை. இவற்றிற்கான ஏற்பாடுகளை முன்னரே செய்து வைக்க வேண்டும்.
தத்கால் ஒதுக்கீடு திறப்பதற்கு 1-2 நிமிடங்களுக்கு முன் லாக் இன் செய்து விடவும். முன்பதிவு செய்யும் முன்னதாகவே ஸ்டேஷன் கோட் மற்றும் பர்த்தின் தேர்வை செய்து வைக்கவும். இதன் பிறகு தத்கால் முன்பதிவு துவங்கியபிறகு, மாஸ்டர் பட்டியலிருந்து பயணிகளின் பெயர்களை தேர்வு செய்து கட்டண ஆப்ஷனுக்கு செல்லவும்.
பணம் செலுத்துவதற்காக அனைத்து வங்கி விவரங்களையும் உங்கள் அருகில் வைத்திருங்கள். முடிந்தால், இணைய வங்கி அல்லது OTP இல்லாத கட்டண ஆப்ஷனைப் பயன்படுத்தவும். OTP தேவைப்பட்டால், அதற்காக மொபைலை அருகில் வைத்திருங்கள்.
டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, ஒரே ID-யுடன் இரண்டு வெவ்வேறு ப்ரௌசர்களில் லாகின் செய்யலாம். ஒரு ப்ரௌசரில் வேகம் குறைவாக இருந்தால், மற்றொரு ப்ரைசரை உபயோகிக்கலாம்.
சில ரயில்களின் டிக்கெட்டுகள் மிக வேகமாக முன்பதிவு செய்யப்படுகின்றன. உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை (Confirm ticket) உங்களுக்கு வேண்டுமானால், மற்ற ரயில்களில் நீங்கள் முதலில் முயற்சி செய்யலாம். தத்கால் டிக்கெட்டுகளின் அதிக ஒதுக்கீட்டைக் கொண்ட ரயிலில் டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள். இந்த ட்ரிக்குகளை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் உடனடியாக தத்காலில் டிக்கெட்டுகளைப் பெறலாம்.