IPL Auction 2021: இந்தியன் பிரீமியர் லீக்கின் வரலாற்றில் மிகவும் சிறந்த, நிலையான ஒரு அணியாக சில அணிகளே இருந்துள்ளன. அவற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அனியும் ஒன்றாகும்.
IPL 2020 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை மிகவும் மோசமான ஒரு ஆண்டாக இருந்தது. CSK அணியின் பின்னடைவால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமுற்றார்கள்.
இந்த ஆண்டு ஏலத்தில் CSK அணி சென்ற ஆண்டின் குறைகளை தீர்க்கும் வகையில் தன் அணியை வலுப்படுத்திக்கொள்ள முயற்சி செய்யும். IPL ஏலத்திற்கு முன்னர் மூத்த ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் உட்பட ஆறு வீரர்களை CSK அணி விடுவித்தது. க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் ஹேல்ஸ், உலக நம்பர் 1 டி 20 பேட்ஸ்மேன் டேவிட் மாலன் போன்ற பவர்-ஹிட்டர்களை CSK தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ள கடுமையாக முயலும் என கூறப்படுகின்றது. பேட்டிங்கைப் பொறுத்தவரை இந்த வீர்ரகள் அணியின் இலக்காக உள்ளார்கள்.
CSK அணி உரிமையாளர்கள் தங்களிடம் இருந்த மூத்த வீரர்களில் பெரும்பாலோரை வெளியிட்டார்கள். இருப்பினும், சுரேஷ் ரெய்னா மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தி அவரை அணியில் தக்க வைத்துள்ளார்கள். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக IPL 2020-ல் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரெய்னா அணியில் இருப்பது CSK அணிக்கு மிடில் ஆர்டரில் தேவையான உறுதியை அளிக்கும்.
CSK அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீர்ரகளில் அவர்கள் கேதார் ஜாதவை மீண்டும் பெற முயலலாம். அவர் குறைந்த விலையில் கிடைத்தால் அது அவர்களுக்கு நல்லதாக இருக்கும். வேறு யாரையும் CSK அணி திரும்பப்ப் பெற முயலும் என தோன்றவில்லை என இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நேஹ்ரா தெரிவித்தார்.
எம்.எஸ்.தோனி (C), சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கே.எம். ஆசிப், தீபக் சாஹர், டுவைன் பிராவோ, ஃபாஃப் டு பிளெசிஸ், இம்ரான் தாஹிர், நாராயண் ஜெகதீசன், கர்ன் சர்மா, லுங்கி என்ஜிடி, மிட்செல் சாண்ட்னர், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கேக்வாட் , ஷர்துல் தாகுர், ஜோஸ் ஹேசில்வுட், ஆர் சாய் கிஷோர், சாம் கரன்
கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன் (ஓய்வு பெற்றவர்), மோனு சிங், பியூஷ் சாவ்லா, முரளி விஜய்
க்ளென் மேக்ஸ்வெல், மொயீன் அலி, அலெக்ஸ் ஹேல்ஸ் / ஜேசன் ராய் / டேவிட் மாலன் / ஆரோன் பிஞ்ச், கே. கௌதம், சிவம் தூபே, சாம் பில்லிங்ஸ்