LIC IPO Latest News: இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC-யின் IPO வெளியீடு பற்றி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு முதலீட்டாளர்கள் மற்றும் LIC பாலிசிதாரர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்போது இது குறித்த மற்றொரு முக்கியமான செய்து வந்துள்ளது. இது LIC பாலிசிதாரர்களின் மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் அதாவது LIC-யின் பாலிசிதாரர்கள் LIC IPO மூலம் மிகப்பெரிய நன்மைகளைப் பெற உள்ளனர். LIC IPO வெளிவரும் போது, இந்திய அரசு LIC பாலிசிதாரர்களுக்கு 10 சதவீத பங்குகளை ஒதுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
LIC IPO தொடங்கப்படும்போது LIC பாலிசிதாரர்களுக்கு வரப்போகும் ஒரு நல்ல செய்தி குறித்து முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) செயலாளர் துஹின் காந்தா பாண்டே தெரிவித்தார்.
LIC IPO வெளியீட்டு தேதி 2022 நிதியாண்டில் இருக்கும் என கூறப்படுகிறது. இதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் 2021 உரையில் அறிவித்தார். இந்த வெளியீட்டை கவனிக்கும் DIPAM, LIC IPO வெளியீட்டு தேதி 2021 அக்டோபருக்குப் பிறகு இருக்கும் என்று கூறியுள்ளது.
LIC IPO-வில் சில்லறை முதலீட்டாளர்கள் 10 சதவிகித ஒதுக்கீடு பெறுவதைப் போல, LIC பாலிசிதாரர்களுக்கும் அந்த நன்மையை வழங்க இந்திய அரசாங்கம் முயல்கிறது என்று DIPAM செயலாளர் கூறினார். இந்திய அரசாங்கம் LIC IPO-வில் இருந்து சுமார் 90,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. DIPAM இதற்கான பணிகளை கவனித்து வருகிறது.
LIC இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். மேலும் ஒரு நிறுவனமாக எல்.ஐ.சியின் உண்மையான மதிப்பை மதிப்பிடுவதற்கு, அக்டூரியல் அதாவது நடைமுறை நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசாங்கம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. LIC IPO-வின் வெளியீட்டிற்கு டிலாய்ட் மற்றும் SBI கேபிடல் ஆகியாவற்றை இந்திய அரசாங்கம் உதவி நிறுவனங்களாக நியமித்துள்ளது.
சில சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி, LIC-யின் மதிப்பு சுமார் 12.85-15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. LIC-யின் மொத்த பங்கில் 6-7 சதவிதத்தை விற்று 90,000 கோடி ரூபாயை திரட்ட மோடி அரசாங்கம் திட்டமிடுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டுக்கு (RIL) அடுத்தபடியாக, இந்தியாவின் மிக அதிக மொத்த மதிப்பு கொண்ட நிறுவனமாக LIC உள்ளது. மிகப்பெரிய நிறுவனங்களான HDFC வங்கி, TCS, Infosys மற்றும் HUL ஆகியவையும் LIC-க்கு பிறகே வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.