BSNL வாடிக்கையாளர்களுக்கு good news: விரைவில் வருகிறது 4G connection!!

நாடு முழுவதும் உள்ள பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. பண்டிகை காலங்களுக்கு இடையே BSNL தனது 4 ஜி சேவையை விரைவில் தொடங்கக்கூடும். இது தொடர்பான முன்மொழிவு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பெறப்பட்ட தகவல்களின்படி, 4 ஜி சேவையைத் தொடங்குவதற்கான திட்டம் விரைவில் அதிகாரம் பெற்ற தொழில்நுட்பக் குழுவின் முன் வைக்கப்படும். ஒப்புதல் கிடைத்த பின்னர் உடனடியாக சேவை தொடங்கும்.

1 /5

நாட்டில் பல தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் உள்ள நியலியிலும் BSNL ஒரு நம்பகமான தொலைத்தொடர்பு நெட்வொர்க்காக பார்க்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களுக்கு நிகரான பல சேவைகளும் தள்ளுபடிகளும் BSNL-ல் குறைவில்லாமல் கிடைக்கின்றன.

2 /5

எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, BSNL மூத்த அதிகாரி ஒருவர் நாடு முழுவதும் 4 ஜி நெட்வொர்க்கைத் தொடங்குவது தொடர்பான கோப்பு தொலைத் தொடர்புத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இருப்பினும், 4 ஜி சேவையைத் தொடங்குவதற்கான காலக்கெடு இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார்.

3 /5

பெறப்பட்ட தகவல்களின்படி, 4 ஜி சேவையைத் தொடங்குவதற்கான திட்டம் விரைவில் அதிகாரம் பெற்ற தொழில்நுட்பக் குழுவின் முன் வைக்கப்படும். ஒப்புதல் பெற்ற பின்னரே சேவை தொடங்கும்.  

4 /5

இதற்கிடையில், BSNL ஊழியர்களும் அதிகாரிகளும் 4 G சேவையை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அரசாங்கம் தொலைத் தொடர்பு நிறுவனத்தை காப்பாற்ற முயற்சிக்காவிட்டால், நவம்பர் 26 முதல் தொழிற்சங்கம் தர்ணாவில் செல்லக்கூடும் என்று சுமார் எட்டு அமைப்புகள் அச்சுறுத்தியுள்ளன.

5 /5

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் BSNL நெட்வொர்க்கின் இணைப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இன்னும் BSNL 2G மற்றும் 3G சேவைகளை மட்டுமே வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்களுக்கு நன்மை செய்வதற்காக அரசு இந்த தொலைத் தொடர்பு நிறுவனத்தை வீணடித்து வருவதாக ஊழியர் அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.