Amazon Fab Phones Fest 2021: நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால், இப்போது உங்களுக்கு அதற்கான சரியான நேரம் வந்து விட்டது. இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் பிப்ரவரி 22 முதல் Fab Phones Fest on Amazon.in-ஐத் தொடங்கியுள்ளது.
இதில், சில ஸ்மார்ட்போன்களில் 40 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. கோடக் வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடியைப் பெறலாம். அமேசான் நொ-காஸ்ட் EMI ஆப்ஷன்கள், தள்ளுபடி கூப்பன்கள் மற்றும் பரிமாற்ற சலுகைகளையும் வழங்குகிறது.
பிரபலமான பிராண்டுகளான ஒன்பிளஸ், சியோமி, சாம்சங், ஆப்பிள், டெக்னோ, ஹானர், லாவா போன்றவற்றில் வாடிக்கையாளர்கள் அதிக சலுகைகளை எதிர்பார்க்கலாம். நீங்கள் கோட்டக் வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், இதில் EMI பரிவர்த்தனைகளைச் செய்து ரூ .1,250 வரை 10% உடனடி தள்ளுபடியை பெற முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. HDFC வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் பிரைம் உறுப்பினர்கள், மாதத்திற்கு 1,333 ரூபாயில் தொடங்கும் அட்வாண்டேஜ் நோ காஸ்ட் இ.எம்.ஐ-யின் சலுகைகளைப் பெறலாம். டாப் பிராண்டுகளில் 12 மாதங்களுக்கு நோ காஸ்ட் EMI-யுடன் 2,000 வரை கூடுதல் பரிமாற்ற சலுகையையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். Source: Amazon Website
விற்பனையாளர்களிடமிருந்து சலுகைகள் மற்றும் டீல்களைப் பெற்று அமேசானில் விற்பனையில் இருக்கும் சில சமீபத்திய மொபைல்கள் மற்றும் மொபைல் அக்சசரிக்கள் இவைதான்: iPhone 12 mini - ரூ .64,990: வாடிக்கையாளர்கள் இப்போது iPhone 12 mini-ஐ ரூ .64,990 க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ .69,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கிடைக்கும் பிற சலுகைகள்: HDFC கிரெடிட் கார்டில் ரூ .6,000 உடனடி தள்ளுபடி, நோ-காஸ்ட் EMI ஆப்ஷன் மற்றும் ரூ .12,400 வரை பரிமாற்ற சலுகை. Source: Apple Website
OnePlus 8T: வாடிக்கையாளர்கள் OnePlus 8T-ஐ மிகவும் மலிவாக ரூ .36,999 க்கும், OnePlus 8 Pro-வை ரூ .47,999 க்கும் (அசல் விலை ரூ. 54,999) அமேசான் கூப்பன்கள் மற்றும் வங்கி சலுகைகளுடன் வாங்கலாம். 9 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் EMI-க்கான வசதியும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
இந்த தள்ளுபடி விழாவில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Redmi 9 Power மற்றும் Mi 10i கூடுதல் வங்கி சலுகைகளுடன் கிடைக்கின்றன. பவர்ஹவுஸ் நோட் 9 தொடர் (Powerhouse Note 9 series) 10,999 ரூபாய் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. Redmi Note 9 Pro-வை மிகக் குறைந்த விலையில் ரூ .11,999 க்கு வாங்கலாம். Xiaomi ஸ்மார்ட்போனில், நீங்கள் 12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் EMI ஐக்கான சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். Source: Xiaomi Website
அமேசான் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் 2021 இன் போது, வாடிக்கையாளர்கள் சாம்சங் எம் தொடரில் கூடுதல் அமேசான் கூப்பன் சலுகைகளுடன் சிறந்த மதிப்பீடு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் 30 சதவீதம் வரை தள்ளுபடி உட்பட சலுகைகளைப் பெற முடியும். சாம்சங் கேலக்ஸி எம் 51-யில் கூடுதல் கூப்பன் சலுகைகள் மற்றும் ரூ .7,250 வரை தள்ளுபடியும் கிடைக்கும். சாம்சங் M31s 4,000 ரூபாய் தள்ளுபடியில் ரூ .18,499 என்ற ஆரம்ப விலையில், 6 மாத நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகைகளுடன் கிடைக்கும். இந்த ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட்டில் ஸ்மார்ட்போன் வாங்குவதை மிகவும் எளிதாக்க, வாடிக்கையாளர்கள் வங்கி சலுகைகளுடன் கூடுதல் தள்ளுபடியையும் பெற முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் முறையே ரூ .69 மற்றும் ரூ .179 தொடங்கி மொபைல் பாகங்கள் மற்றும் ஹெட்செட்களைப் பெறலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பவர்பேங்க்ஸ் ரூ .399 முதல் கிடைக்கும். Photo: Pixabay