ஒடிசாவில் கோரதாண்டம் ஆடிய ஃபானி புயல்: புகைப்படங்கள்!!

1 /8

வெள்ளிக்கிழமையான இன்று காலை 8 மணியளவில், வங்காள விரிகுடாவைச் சுற்றிக் கொண்டிருந்த சுழல் புயல் ஃபானி ஒடிசாவை தாக்கியது. ஒடிசாவில் 15 மாவட்டங்களில் ஃபானி புயல் தாக்கியது.

2 /8

ஒடிசாவில் ஃபானி புயல் தாக்குவதற்கு முன்னதாக கிழக்கு மாகாணத்தில் வாழும் ஒரு மில்லியன் மக்களை அதிகாரிகள் வெளியேற்றி பதுகாப்பான பகுதிக்கு அழைத்து சென்றனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. மே 15 வரை மருத்துவர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் விடுப்பு எடுக்கக் கூடாது எனவும் அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. (Reuters photo)

3 /8

காற்றின் வேகம் மணி நேரத்திற்கு 200 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் ஒடிசாவை தாக்கியது. இதில் பல மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன.   

4 /8

ஃபானி புயல் கோரதாண்டவத்தால் சுமார் 10,000 கிராமங்கள் மற்றும் 52 நகர்ப்புற உள்ளூர் அமைப்புகள் பாதிப்புக்குள்ளாகும் என கணிக்கப்பட்டுள்ளது. சேதங்கள் குறித்து முழுமையான விவரங்கள் இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  

5 /8

ஒடிசாவில் ஃபானி புயல் காரணமாக மூன்று பேர் இறந்தனர். ஒரு பெண் கடுமையாக காயமடைந்துள்ளார். காயம் அடைந்தவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

6 /8

ஒடிசாவில் பல இடங்களில் மின்சார சேவையும், தொலைத் தொடர்பு சேவையும் பாதிப்பு அடைந்துள்ளன. சாலையெங்கும் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மின் கோபுரங்கள், செல்போன் கோபுரங்கள் சாய்ந்துள்ளன.  

7 /8

ஒடிசாவில் ஃபானி புயல் தாக்குதலை அடுத்து தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  

8 /8