BSNL Broadband Plans: வாடிக்கையாளர்களின் இணைய வேகமும் மகிழ்ச்சியும் double ஆனது

BSNL தனது திட்டங்களில் இருக்கும் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. BSNL இப்போது இருக்கும் பிராட்பேண்ட் திட்டங்களில் இரட்டை இணைய வேகத்தை வழங்கும் என கூறப்படுகிறது.

அரசாங்க தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) வாடிக்கையாளர்களை கவர எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை. அரசு நிறுவனம் இப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பிராட்பேண்ட் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இப்போது வாடிக்கையாளர்களிடம் இருக்கும் திட்டங்களிலேயே இரட்டை வேகம் கிடைக்கும். என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று பார்க்கலாம்...

1 /6

இந்த சிறப்புத் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு மாதம் முழுவதும் மொத்தம் 500GB தரவு 50 mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. முன்னர், தரவு தீர்ந்த பிறகு, பயனர்களுக்கு 2mbps வேகம்தான் கிடைத்தது. ஆனால் புதிய திட்டத்தின் கீழ் தரவு முடிந்ததும் இப்போது நீங்கள் 10mbps வேகத்தைப் பெறுவீர்கள்.

2 /6

ரூ .849 மாத கட்டணத்தில் வரும் இந்த திட்டத்தில், 500 ஜிபி டேட்டா 100 mbps வேகத்துடன் வழங்கப்படுகிறது. நிலையான தரவு முடிந்ததும், வாடிக்கையாளர்களுக்கு இப்போது 10mbps வேகம் கிடைக்கும்.

3 /6

BSNL-ன் இந்த திட்டத்தில், 300GB தரவு 50 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் நிலையான தரவை முடித்த பிறகு, நிகர வேகம் 2mbps மட்டுமே இருக்கும். இப்போது புதிய திட்டத்தின் படி, தரவு முடிந்ததும் 5mbps வேகத்தைப் பெறுவீர்கள்.  

4 /6

BSNL-ன் இந்த திட்டத்தில், 300GB தரவு வாடிக்கையாளர்களுக்கு 50 mbps வேகத்தில் வழங்கப்பட்டது. இப்போது தரவு வரம்பை முடித்த பிறகு, பயனர்கள் 5mbps வேகத்தைப் பெறுவார்கள். முன்னதாக, இந்த திட்டத்தில் நிலையான தரவுக்குப் பிறகு 2mbps வேகம் மட்டுமே கிடைத்தது.

5 /6

100GB திட்டத்தில், முன்னர் வாடிக்கையாளர்களுக்கு 50 எம்.பி.பி.எஸ் வேகத்தில் 100 ஜிபி தரவு வழங்கப்பட்டது. இதற்காக வாடிக்கையாளர்கள் 499 ரூபாய் செலுத்த வேண்டும். முதல் 100 ஜிபி தரவின் முடிவில், வேகம் 1 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்பட்டது. ஆனால் இப்போது தரவு தீர்ந்துவிட்டால் 2mbps வேகம் கிடைக்கும்.

6 /6

BSNL தனது திட்டங்களில் கிடைக்கும் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. BSNL-ன் 500 ரூபாய் மற்றும் 650 ரூபாய் பிராட்பேண்ட் திட்டங்களில், முன்பு, நிர்ணயிக்கப்பட்ட தரவு தீர்ந்துவிட்டால் 1MBPS வேகம் மட்டுமே கிடைத்தது. ஆனால் இப்போது இது 2 MBPS ஆக உயர்த்தப்படுகிறது.