பப்பாளி பழத்தால் பயனா, பாதகமா? எது அதிகம்? அறிவோம் இங்கே!!

அளவுக்கு மீறினால் எந்த வித உணவும் நம் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்த ஒன்றேயாகும். எனினும், பழங்களைப் பொறுத்தவரை நாம் அந்த வகையில் எண்ணுவது இல்லை. பழங்களால் கூட தீமைகள் ஏற்படுமா என நாம் வியக்கத்தான் செய்கிறோம். ஆனால், உண்மை என்னவென்றால், குறிப்பிட்ட அளவை விட அதிகமாக சில பழங்களை சாப்பிட்டாலும், நம் உடலுக்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அனைவருக்கும் பிடித்தமான பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ள பழம் பப்பாளி பழம். ஆனால், பப்பாளி பழமும் நம் உடலுக்கு தீமை விளைவிக்கக்கூடும். பப்பாளி பழத்தால் விளையும் நன்மைகள், தீமைகள் என இரண்டையும் இங்கே காணலாம். 

1 /5

பப்பாளி அதன் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது. இந்த குறைந்த கலோரி உள்ள பழம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு பிரபலமானது. மேலும் இது செரிமானத்தையும் ஊக்குவிக்கிறது. பப்பாளி பீட்டா கரோட்டின் போன்ற ஆண்டிஆக்சிடெண்ட் கரோட்டினாய்டுகளின் நல்ல மூலமாகக் கருதப்படுகிறது, இது நம் பார்வை சக்திக்கும் மிகவும் பயனளிக்கிறது. 

2 /5

பப்பாளி இலைகள் டெங்கு காய்ச்சலுக்கும் எதிராக செயல்படுகின்றன. நார்ச்சத்து அதிகம் உள்ள பப்பாளி மலச்சிக்கல் போன்ற சூழ்நிலைகளிலும் பயனளிக்கும். இருப்பினும், அதிக அளவில் இதை உட்கொண்டால் இது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

3 /5

பப்பாளியில் (Papaya) அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. ஆனால், பப்பாளி பழத்தை உட்கொண்டால், அது வயிற்றின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். பப்பாளியில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான அமைப்பில் தொந்தரவை ஏற்படுத்தும். அதிகப்படியான பப்பாளியை உட்கொள்வது வயிற்றுப் பிடிப்பு, வீக்கம் மற்றும் குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

4 /5

பப்பாளி இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும். இத்தகைய நிலை நீரிழிவு (Diabetes) நோயாளிகளுக்கு ஆபத்தானது. ஆகையால், குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் பப்பாளியை அதிகம் உட்கொள்ளும் முன், மருத்துவரை அணுகுவது முக்கியம். நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்து, அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தால், கண்டிப்பாக மருத்துவரை ஆலோசித்தே பப்பாளி பழத்தை உட்கொள்ள வேண்டும். 

5 /5

பப்பாளி சாப்பிடுவதால் சிலருக்கு ஒவ்வாமை (Allergy) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இவற்றால் சிலருக்கு சில எதிர்விளைவுகளும் ஏற்படலாம். வீக்கம், தலைச்சுற்றல், தலைவலி மற்றும் அரிப்பு ஆகியவை இந்த எதிர்விளைவுகளில் அடங்கும். ஆகையால் ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் பப்பாளி பழத்தை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.