7th Pay Commission: Oct-Dec காலாண்டுக்கான GPF வட்டி விகிதத்தை அறிவித்தது அரசு!!

7 வது ஊதியக்குழு சமீபத்திய செய்தி: அக்டோபர்-டிசம்பர் காலாண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதியத்தின் (GPF) வட்டி விகிதத்தை அரசு அறிவித்துள்ளது என்று நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது.

 

அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் GPF வட்டி விகிதம் 7.1% ஆக இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகத்தின் கீழ் பொருளாதார விவகாரத் துறையின் பட்ஜெட் பிரிவு சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1 /5

நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, இந்த வட்டி விகிதம் 2020 அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்பட்டு டிசம்பர் வரை செல்லுபடியாகும். ஒரு நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் மாற்றியமைக்கிறது. பின்னர் GPF மற்றும் பிற திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களை அறிவிக்கிறது. அதாவது, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் பிறகு GPF மீதான வட்டி விகிதம் கண்காணிக்கப்படுகிறது அல்லது மாற்றப்படுகிறது.

2 /5

அறிவிப்பு வெளியான பிறகு வட்டி விகிதம் இந்த நிதியை நேரடியாக பாதிக்கும். இதில் சேர்க்கப்பட்டுள்ள நிதிகள் - பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய சேவைகள்), பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி (இந்தியா), அகில இந்திய சேவை வருங்கால வைப்பு நிதி, மாநில ரயில்வே வருங்கால வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்), இந்திய கட்டளைத் துறை வருங்கால வைப்பு நிதி, இந்திய கடற்படை கப்பல்துறை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, பாதுகாப்பு சேவை அதிகாரிகள் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஆயுதப்படைகள் தனிப்பட்ட வருங்கால வைப்பு நிதி ஆகியவையாகும்.

3 /5

GPF என்பது ஒரு வகை வருங்கால வைப்பு நிதி கணக்காகும். இருப்பினும், இது அனைத்து வகை ஊழியர்களுக்கும் பொருந்தாது.

4 /5

இந்த நிதி அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது. GPF இல் பணம் போடுவது அனேகமாக அனைத்து வகை அரசு ஊழியர்களுக்கும் கட்டாயமாகிறது.

5 /5

இதை வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) உடன் குழப்பக் கூடாது. அது அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.