7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% DA hike, சம்பளம், ஓய்வூதியம் உயரும்!!

7th Pay Commission: நாட்டின் சுமார் 1 கோடி மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு அகவிலைப்படியை (Dearness Allowance) அதிகரித்துள்ளது.

அத்துடன் அகவிலை நிவாரணமும் (DR) மீண்டு கொடுக்கப்படும் என்று தெரிய வருகிறது. 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த இரட்டை நன்மை ஜனவரி முதலே கிடைக்கத் தொடங்கும்.

1 /5

ஊடக அறிக்கையின்படி, அரசாங்கம் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும். 4 சதவிகிதம் அதிகரித்த பிறகு, அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாக அதிகரிக்கும். இதை ஊழியர்கள் ஜனவரி முதல் பெறத் தொடங்குவார்கள் என்றாலும், அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. அரசாங்கத்தின் இந்த உத்தியோகபூர்வ அறிவிப்புக்காக மத்திய ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

2 /5

மார்ச் 2020 இல், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணத்தை ஜனவரி 1, 2020 முதல் வெளியிட அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அடிப்படை சம்பளம் / ஓய்வூதியத்தில் தற்போதுள்ள அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.

3 /5

கொரோனா தொற்று நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் தனது ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் கூடுதல் கொடுப்பனவுகளை 2020 ஜனவரி 1 முதல் நிறுத்தியது. 2020 ஜூலை 1 முதல் 2021 ஜனவரி 1 வரை அடுத்த தவணைக் கொடுப்பனவுகளும் வழங்கப்படாது என்று செலவுத் துறை ஒரு குறிப்பில் கூறியிருந்தது. இருப்பினும், DA, DR ஆகியவை தற்போதைய கட்டணத்தில் தொடர்ந்து செலுத்தப்படும்.

4 /5

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணியாளர் கூட்டமைப்பு (Association of Employees Confederation of Central Government Employees and Workers) நடப்பு அரசாங்க கருவூலத்தின் கணக்கை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன் வைத்து, இது குறித்து கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய பணவீக்க விகிதத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும், 28 சதவிகித அடிப்படையில் அகவிலைப்படியை வழங்க நிதி அமைச்சரிடம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினர் என்று சங்கம் தெரிவித்துள்ளது. கடமையில் இருந்தபோது பல ஊழியர்கள் உயிர் இழந்தனர். இவை அனைத்தையும் மனதில் வைத்து, நிதி அமைச்சர் 2020 ஜனவரி முதல் 28 சதவீதம் என்ற விகிதத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 /5

செய்தி நிறுவனமான பி.டி.ஐ-ன் படி, அரசாங்கம் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை நிறுத்தியதால், 2021-22 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய நிதி ஆண்டுகளில் கூட்டாக 37,530 கோடி ரூபாயை அரசு சேமித்திருக்கும். மாநில அரசுகள் பொதுவாக மையத்தின் உத்தரவின் பேரில் இயங்குகின்றன. DA, DR தவணைகள் நிறுத்தப்பட்டதால், மாநில அரசுகளும் சுமார் 82,566 கோடி ரூபாயை மிச்சப்படுத்தியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.