Personality By Zodiac Sign: நட்பை பேணுவதில் வல்ல 5 ராசிக்காரர்கள்

வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, 5 ராசிக்காரர்கள் நட்பைப் பேணுவதில் வல்லவர்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் மிகவும் நல்ல நண்பர்களாக இருப்பதோடு, நட்புக்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள்.

 

1 /5

மகர ராசிக்காரர்கள் ஒருவரை தங்கள் நண்பராக கருதிவிட்டால், அவரது நட்பை விட்டு எப்போதும் விலகுவதில்லை. துன்ப நேரங்களில் உடன் இருக்கிறார்கள். மகர ராசிக்காரர்கள் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்களுடன் நன்றாகப் பழகுவார்கள்.

2 /5

கடக ராசிக்காரர்களின் நண்பர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். தங்கள் நண்பர்களை மிகவும் நேசிக்கிறார்கள். நண்பர்கள் விஷயத்தில் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அதே அளவு யதார்த்தமாகவும் இருப்பார்கள். இதன் காரணமாக, இவர்களால் அனைத்து சூழ்நிலைகளையும் நன்றாக கையாள முடியும். 

3 /5

சிம்ம ராசிக்காரர்களுக்கு நண்பர்கள் அதிகம். நண்பர்களுக்காக அதிகம் செலவு செய்கிறார்கள். நண்பனின் மனம் நோகாமல் இருக்க எந்த நிலைக்குச் செல்ல வேண்டும். சிம்மம் மேஷம், கடகம், மிதுனம், விருச்சிகம், தனுசு, கன்னி, மீனம் ஆகிய ராசிகளுடன் நல்ல நட்பு உண்டு.  

4 /5

மிதுன ராசிக்காரர்கள் மிகவும் நம்பகமானவர்கள். உங்கள் அனைத்து ரகசியங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். நண்பருக்கு சிறிய கஷ்டம் வந்தாலும், பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு ரிஷப ராசியினருடனும்  நல்ல நட்பு இருக்கும்.

5 /5

ரிஷப ராசிக்காரர்கள் நல்ல நண்பர்களாக இருப்பார்கள். நட்பைப் பேணுவதற்கு எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள். மேலும் இவர்கள் தங்கள் நண்பர்களை தவறான செயல்களிலிருந்து காப்பாற்றுகிறார்கள். இவர்கள் மிதுனம், கன்னி, மகர ராசிக்காரர்களுடன் நன்றாகப் பழகுவார்கள்.  (பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்குபொறுப்பேற்காது.)