ஆய்லி ஸ்கின் இருக்கவங்க இதையெல்லாம் சாப்பிடவே கூடாது

Oily Skin​ People Should Avoid These Foods: சரும பாதுகப்பு மிகவும் முக்கியமானது. நம் சருமம் தூசி, மாசு மற்றும் இன்னும் பல வித விஷயங்களால் பாதிக்கப்படுகின்றது. 

பலருக்கு எண்ணெய் பசை சருமம் இருப்பதால் பருக்கள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் இருந்து விடுபட மக்கள் அடிக்கடி எண்ணெய் கட்டுப்பாட்டு பொருட்களை பயன்படுத்துகின்றனர். எனினும், எண்ணெய் பசையை நீக்கவும், சருமத்தை பாதுகாக்கவும் நம் வாழ்க்கை முறையிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதற்கான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /6

ஹார்மோன்கள், சுற்றுச்சூழல் போன்றவற்றால் நமது சருமம் பல நேரங்களில் சேதமடைகிறது. சரும பராமரிப்பு பற்றி இந்த பதிவில் காணலாம். இதற்கு நாம் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், அப்போதுதான் எண்ணெய் சரும பிரச்சனைகளை குறைக்க முடியும்.

2 /6

பால், தயிர் போன்ற பால் பொருட்கள் நம் சருமத்திற்கு நல்லது என்றாலும், பால் பொருட்களில் உள்ள ஹார்மோன்களின் அதிக உள்ளடக்கம் சருமத்தின் துளைகளை அடைத்துவிடும். இதனால் சருமம் எண்ணெய் பசையாகி முகப்பருக்கள் உருவாகும். எனவே, எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், பால் பொருட்களுக்கு பதிலாக பாதாம் பால் அல்லது சோயா பால் குடிக்கலாம்.

3 /6

உங்களுக்கு முகப்பரு பிரச்சனை இருந்து, மது அருந்தும் பழக்கமும் இருந்தால், உடனடியாக அதை விட்டுவிடுங்கள். மது நம் சருமத்திற்கு நல்லதல்ல. மதுபானம் குடிப்பதால் சருமம் வறண்டு, நீரிழப்பு ஏற்படுகிறது. இந்த குறைபாட்டை ஈடுசெய்ய, சருமம் கூடுதல் எண்ணெயை உற்பத்தி செய்கிறது. இது துளைகளை மூடுகிறது.

4 /6

வறுத்த உணவுகள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிக எண்ணெய் உட்கொள்வது சருமத்தில் பருக்களை ஏற்படுத்தும். பிரஞ்சு ஃப்ரைஸ், சமோசா மற்றும் சிப்ஸ் போன்ற அதிக வறுத்த உணவுகளில் அதிக அளவு ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதன் காரணமாக உங்கள் சருமத்தின் ஆரோக்கியம் மோசமடையலாம்.

5 /6

அதிக உப்பை சாப்பிடுவதால் நமது சருமம் வறட்சியடைகிறது. இதனால் தோல் எண்ணெய் உற்பத்தி செய்து நீர் இழப்பை சரி செய்கிறது. ஆகையால், ஆரோக்கியமான மற்றும் எண்ணெய் இல்லாத சருமத்தைப் பெற உப்பு குறைவாக சாப்பிடுங்கள்.

6 /6

இனிப்புகளை சாப்பிடுவது இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இதனால் பல வகையான பிரச்சனைகளும் எழுகின்றன. சருமத்திற்கும் இது கேடுதான். சர்க்கரை அதிகம் உள்ள உணவு உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது சருமத்தை சேதப்படுத்தி அதில் எண்ணெய் பசையை அதிகரிக்கும்.