Mercury Retrograde August 5: இந்த குரோதி ஆண்டில், புதன் வக்ர கதியில் இயங்கும்போது அருமையான வாழ்க்கையை எதிர்கொள்ளும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம். ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று வக்ர கதியில் இயங்கத் தொடங்கும் புதன் ஆகஸ்ட் 28 வரை அதே திசையில் இயங்கும்.
புதன் கிரகமானது வக்ரகதியில் அதாவது கடிகாரச் சுற்றுக்கு எதிர்திசையில் இயங்கும்போது வழக்கமான பலன்களில் இருந்து மாறுபட்ட பலன்கள் கிடைக்கும். யாருக்கு என்ன பலன்?
கன்னி ராசியில் ஆகஸ்ட் 5 முதல் 12ம் தேதி வரை வக்ரகதியில் இயங்கும் புதன், அதன் பிறகு சிம்மத்தில் ஆகஸ்ட் 28 வரை இயங்குவார்.
ஆகஸ்ட் 28க்கு பிறகு சிம்மத்தில் தனது வக்ரகதி இயக்கத்தில் இருந்து நிவர்த்திப் பெற்று, மீண்டும் வழக்கமான கடிகாரச் சுற்றில் இயங்கத் தொடங்குவார் புதன் பகவான்
சிம்ம ராசிக்கு புதனின் வக்ரகதி இயக்கம் மேதாவித்தனத்தைத் தரும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் அனைவரையும் ஈர்ப்பீர்கள். புதனின் இந்த வக்ர இயக்கத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு உற்சாகமும், சுறுசுறுப்பும் அதிகமாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்தும் விஷயங்கள் நடந்தேறும்
புதனின் பிற்போக்குநிலையின் இரண்டாம் பாதியில் உங்கள் நிதிநிலைமை சீரடையலாம், வேலை, குடும்பம் அல்லது பிற உறவுகள் உங்களைப் புரிந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் வளர்ச்சியும் லாபமும் அதிகரிக்கும்
சோகமான மனநிலை மாறும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தரமான சம்பவங்கள் நடைபெறும் காலம் இது, வீடு வாங்க எடுத்த முயற்சிகள் தற்போது பலன் தரும். உங்கள் தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்
புதன் கன்னியில் இருந்து வக்ரகதிக்கு செல்கிறார், இதனால் கன்னி ராசியினருக்கு பண வரத்தும், திடீர் பணவரத்தும் வரும் வாய்ப்புகள் உள்ளன. சொல்லத்தெரியாத சந்தோஷமான உணர்வுகள் மனதில் பொங்கும். மொத்தத்தில் இந்த புதன் வக்ரகதி, உங்களுக்கு நன்மையைத் தரும்
உறவுகளிடையே ஆரோக்கியமான மனநிலை ஏற்படும். வாழ்க்கையை விளையாட்டாக மாற்றுவதற்கான உங்கள் திறமை வளரும், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் பலன் தரும் காலம் இது. நினைத்த செயல்களை செய்து முடிக்கலாம் என்ற உறுதியும் வரும்
இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது