Foods For Mental Health: மனச்சோர்வு, மன அழுத்தம், டிமென்ஷியா, மறதி மற்றும் நினைவாற்றல் பலவீனமாக இருக்கிறதா?
வைட்டமின் பி 12 குறைபாடு மனச்சோர்வு, மன அழுத்தம், டிமென்ஷியா, மறதி மற்றும் பலவீனமான நினைவாற்றலுக்கு வழிவகுக்கும். இந்த ஊட்டச்சத்து உங்கள் உணவில் போதுமான அளவு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | Food For Heart: மாரடைப்பை தடுக்கும் 'மஞ்சள்' நிற உணவுகள்
மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் பி 12 சத்து மிகவும் நன்மை பயக்கும் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சில வகையான உணவுகளில் பி 12 அதிகம் உள்ளது மற்றும் அவற்றை தினமும் உட்கொள்வது மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.
முளைக்கட்டிய தானியத்தில் அதிக அளவு வைட்டமின் பி 12 உள்ளது. தானியங்கள் நமது உணவை அதிக சத்துள்ளதாக மாற்றுகிறது.
நோரி அடிப்படையில் கடற்பாசி ஆகும், இது உலர்த்தப்பட்டு சுஷி என்ற ஜப்பானிய உணவு தயாரிக்க பயன்படுகிறது. வைட்டமின் பி 12 உட்பட பல ஊட்டச்சத்துக்களில் நோரியில் நிறைந்துள்ளன. ஆய்வுகளின்படி, 4 கிராம் நோரியில் சுமார் 2.4 மில்லிகிராம் வைட்டமின் பி 12 கிடைக்கும். குறிப்பாக மனநல நோயாளிகளுக்கு நோரி உண்ண பரிந்துரைக்கப்படுகிறது.
வைட்டமின் பி 12க்கான களஞ்சியம் என்றே காளானைச் சொல்லலாம்.
ஊட்டச்சத்து நிபுணர்கள் கொண்டைக்கடலையின் ஆரோக்கிய நலன்களைப் பற்றி அறிவுறுத்துகின்றனர். அசைவத்தில் கோழியில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் கொண்டைக்கடலையில் உள்ளது. புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி12 சத்து அதிகமாக இருக்கும் இந்த கடலையில், பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளது,
இந்த மீன் வைட்டமின்கள், புரதம் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டது. வைட்டமின் பி12 நிறைந்துள்ள டுனாவின் கருமையான தசைகளில் அதிக சத்துக்கள் உள்ளன.