Nivetha Pethuraj: புதிய சாதனை படைத்த நிவேதா பெத்துராஜ்! ரசிகர்கள் வாழ்த்து..

Nivetha Pethuraj: நடிகை நிவேதா பெத்துராஜ், பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

1 /7

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையாக விளங்குபவர், நிவேதா பெத்துராஜ். இவர், பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த முதல் படம், ‘ஒரு நாள் கூத்து’. இதில் அவர் காவ்யா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். 

2 /7

நிவேதா பெத்துராஜ், தனது நடிப்பிற்காக சில மாநில விருதுகளையும் வென்றுள்ளார். நடிப்பிற்காக விருதை வென்றது மட்டுமன்றி தற்போது தனது இன்னொரு தனித்திறமைக்காக இன்னொரு கோப்பையையும் வென்றுள்ளார். 

3 /7

நிவேதா பெத்துராஜ், தான் நடித்த படங்களில் தைரியமான கதாப்பாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். 

4 /7

டிக் டிக் டிக் படத்தில் விண்வெளி வீராங்கனையாகவும், திமிரு பிடிச்சவன் படத்தில் காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளார். 

5 /7

நிவேதா பெத்துராஜ், நடிகையாக மட்டுமன்றி விளையாட்டு வீராங்கனையாகவும் வலம் வருகிறார். இவர், பேட்மிண்டன் விளையாட தீவிர பயிற்சி மேற்கொண்டு, அதில் தற்போது வெற்றி கண்டுள்ளார். 

6 /7

மிக்ஸ்ட் டபுல்ஸ் பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணிக்காக நிவேதா பெத்துராஜ் விளையாடியுள்ளார். அது மட்டுமன்றி, இப்போட்டியில் அவர் வெற்றியும் கண்டுள்ளார். 

7 /7

கோப்பையுடன் எடுத்துள்ள புகைப்படங்களை நிவேதா வெளியிட்டுள்ளார். இவை தற்போது வைரலாகி வருகின்றன.