நிஸானின் மிட்-சைஸ் எஸ்யூவி எக்ஸ்-டிரைல்! இறக்குமதி செய்யப்பட்ட காரின் விலை இவ்வளவு தானா?

Nissan X-Trail STD latest updates : இந்தியாவில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட நிஸான் எக்ஸ்-டிரைல் (Nissan X-Trail) கார்  வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கார் ஆகும். இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது...

நிஸான் டிரையல் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்ட நிலையில், முன்பதிவு செய்தவர்களுக்கு கார் டெலிவரி கொடுப்பது தொடங்கிவிட்டது... நிஸானின் புதிய வரவின் விலை என்ன தெரியுமா?

1 /8

நிஸான் கார் நிறுவனத்தின் இரண்டாவது கார் இந்தியாவில் விற்பனையைத் தொடங்கியது. இதுவரை நிஸான், மேக்னைட் காரை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்துவந்த நிலையில், நிறுவனத்தின் 2வது காராக எக்ஸ்-டிரைல் என்கிற மிட்-சைஸ் எஸ்யூவி கார் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது

2 /8

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்கும் கார் என்பதால், இதன் விலை அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது காரின் தொடக்க விலை 49.92 லட்ச ரூபாய் ஆகும்

3 /8

புதிய நிஸான் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட தினத்திலேயே முன்பதிவும் தொடங்கியது. தற்போது, முன்பதிவு செய்தவர்களுக்கு கார்கள் விநியோகம் தொடங்கிவிட்டது  

4 /8

நிஸான் எக்ஸ்-டிரைல் காரில் 1.5 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 12 வோல்ட் மோட்டார் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இதுவொரு மைல்ட்-ஹைப்ரீட் கார் ஆகும்

5 /8

1498 cc இன்ஜின் அதிகப்பட்சமாக 160 பிஎச்பி மற்றும் 300 என்.எம் டார்க் வரையிலான ஆற்றலை காருக்கு கொடுக்கிறது

6 /8

ஈக்கோ, ஸ்டாண்டர்ட் மற்றும் ஸ்போர்ட் என 3 விதமான டிரைவிங் மோட்கள் நிஸான் எக்ஸ் டிரையலில் உள்ளது. காரின் மைலேஜை அதிகரிக்கும் பல அம்சங்கள் இந்தக் காரில் உள்ளன.  

7 /8

ஒரேயொரு வேரியண்டில் கிடைக்கும் நிசான் எக்ஸ் டிரெயில், 7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவி ஆகும். இதன் விலை ரூ. 49.92 லட்சம் தான்

8 /8

 X-Trail 7 ஏர்பேக்குகளுடன் வருகிறது. நிசான் எக்ஸ் டிரெயில் 210 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 3 வண்ணங்களில் கிடைக்கிறது