சனி - புதன் - சுக்கிரன் இணைவினால் புத்தாண்டை கோலாகலமாக தொடங்கும் ‘சில’ ராசிகள்!

டிசம்பர் 2022 மாதம் கிரக நிலைகளின் அடிப்படையில் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி டிசம்பர் கடைசி வாரத்தில் சனி, புதன், சுக்கிரன் ஆகிய மூன்றும் ஒரே ராசியான மகரத்தில் கூடும். மகரத்தில் புதன், சுக்கிரன் மற்றும் சனி கூடுவது மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவரும். இவர்கள் புத்தாண்டை அமர்களமாக வரவேற்பவர்களாக இருப்பார்கள்.

1 /4

மேஷம்: சனி - புதன்-சுக்கிரன் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்களைத் தரும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய தொழில் தொடங்கலாம். பண வரவும் சாதகமாக இருக்கும். எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும். தொழிலில் விரைவான முன்னேற்றம் ஏற்படும். 

2 /4

கடகம்: சனி - புதன்-சுக்கிரன் சேர்க்கையினால் கடக ராசிக்காரர்களுக்கு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வருமானம் பெருகும். புதிய வழிகளில் பணம் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். திருமண வாய்ப்புகள் உண்டாகும்.

3 /4

கன்னி: சனி - புதன்-சுக்கிரன் சேர்க்கையினால் கன்னி ராசிக்காரர்களுக்கு பொற்காலம் தொடங்கும். புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். சம்பளம் உயரும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு.

4 /4

மீனம்: சனி - புதன்-சுக்கிரன் சேர்க்கையினால் மீன ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தில் ஏற்றம் ஏற்படலாம். தொழிலதிபர்கள் பெரும் லாபம் பெறுவார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)