உலக கோப்பை டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த பாகிஸ்தான்!

ஐசிசி டி20 உலககோப்பை போட்டிகளில் முதல் விக்கெட்டிற்கு அதிக ரன்கள் சேர்த்த ஓப்பனிங் பட்னர்ஷிப் என்ற சாதனையை பெற்றது பாகிஸ்தான் அணி.  இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற உலக கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152* ரன்கள் அடித்து வெற்றி பெற்றது

1 /4

பாகிஸ்தானை சேர்ந்த பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் கூட்டணி இந்தியாவிற்கு எதிரான 2021 உலக கோப்பை போட்டியில் முதல் விக்கெட்டிற்கு 152* ரன்கள் அடித்தது.  உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்த ஜோடி முதல் இடத்தில் உள்ளது.   

2 /4

மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் மற்றும் ஸ்மித் கூட்டணி 2007ம் ஆண்டு சவுத் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக முதல் விக்கெட்டிற்கு 145 ரன்கள் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளது  

3 /4

பாகிஸ்தானை சேர்ந்த கம்ரான் அக்மல் மற்றும் சல்மான் பட் கூட்டணி 2010ம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் விக்கெட்டிற்கு 142 ரன்கள் அடித்து மூன்றாம் இடத்தில் உள்ளது  

4 /4

இந்தியாவை சேர்ந்த கவுதம் கம்பீர் மற்றும் சேவாக் கூட்டணி 2007ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 136 ரன்கள் அடித்தது.