ஓடிடியில் ரிலீஸான புது படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

OTT Releases This Week: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ள தமிழ் மற்றும் பிறமொழி படங்களை குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்!

வாரா வாரம், புதுப்புது படங்களும் தொடர்களும் ஓடிடி தளங்களில் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரமும் புதுப்புது படங்களும் தொடர்களும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற தளங்களில் வெளியாகின்றன. அவற்றை எந்தெந்த தளங்களில் பார்க்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். 

1 /7

இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களின் முழு லிஸ்ட்..

2 /7

எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள சித்தா திரைப்படம், திரையரங்குகளில் வெளியான போது பெரும் வரவேற்பினை பெற்றது. இந்த படம் சில நாட்களுக்கு முன்பு டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. இதனை வீக் எண்டில் உங்கள் குடும்பத்தினருடன் பார்த்து மகிழலாம். 

3 /7

நாக சைதன்யா முதன்முதலாக வெப் தொடரில் நடித்துள்ளார். க்ரைம்-மிஸ்டரி த்ரில்லர் தொடராக தூதா உருவாகியுள்ளது. இத்தொடரை, அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை (டிச.,1) முதல் காணலாம். 

4 /7

கடந்த ஆண்டு வெளியான தமிழ் படம், காலேஜ் ரோட். இந்த படம், ஜியோ சினிமா தளத்தில் நாளை வெளியாகிறது. 

5 /7

செப்டம்பர் மாதம் வெளியாகி உலகம் முழுவதும் ஹிட் அடித்த படம், தி ஈக்குவலைசர். தியேட்டரில் நல்ல வரவேற்பினை பெற்ற இந்த படம், நாளை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. 

6 /7

நல்ல ஃபீல் குட் தொடர்களுள் ஒன்று, வர்ஜின் ரிவர். 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர், தற்போது அதன் 5வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த தொடரை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். 

7 /7

காமெடி படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஃபேமிலி ஸ்விட்ச். வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஹாலிவுட் படத்தை பார்க்க நினைத்தால், இந்த படத்தை நாளை முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம்.