Horror Books : நம்மில் பலருக்கு நல்ல நாவல்களை படிக்க பிடிக்கும். அதிலும் ஒரு சிலருக்கு, பேய் கதைகளை படிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி நமக்கு மயிர்கூச்சரிய வைக்கும் கதைகளையும் அதன் நாவல்களையும் இங்கு பார்ப்போமா?
Horror Books : கதை புத்தகங்கள் என்பவை நமக்கு வெவ்வேறு கதைகளை மட்டும் சொல்வதில்லை. வாழ்க்கையில் அனைத்தையும் எப்படி வெவ்வேறு கோணத்தில் இருந்து அணுக வேண்டும் என்பதையும் பிறரை எப்படி குறைவாக மதிப்பிடாமல் அனைவருக்கும் ஒரு கதை இருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது. காதல்-காமெடி, சஸ்பென்ஸ் த்ரில்லர், ஆக்ஷன் த்ரில்லர், மிஸ்ட்ரி த்ரில்லர் என நாவல்களில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அதில், ஒரு சிலருக்கு மயிர்கூச்சரிய வைக்கும் வகையில் சில்லிங் ஆன பேய் கதைகளை படிப்பது பிடிக்கும். அப்படி, இரவில் நம்மை விழிப்புடன் இருக்க வைக்கும் ஹாரர் புத்தகங்களை இங்கு பார்க்கலாமா?
ஒரு சிலருக்கு பேய் போல விடிய விடிய புத்தகம் படிக்க பிடிக்கும். ஒரு சிலருக்கு, பேய் புத்தகங்களையே படிக்க பிடிக்கும். ஒரு பேய் படத்தை பார்க்கிறோம் என்றால் அந்த கதைக்குள்ளாகவே வாழ்வது போல இருக்கும். அப்படி, நமக்கு அதிகமான பய உணர்வை கடத்தும் பேய் புத்தகங்களை இங்கு பார்ப்போமா?
The Shining : தி ஷைனிங் புத்தகத்தை பிரபல ஆங்கில எழுத்தாளர் ஸ்டீஃபன் கிங்ஸ் எழுதியிருக்கிறார். இது, ஒரு சைக்கலாஜிக்கல் ஹாரர் புத்தகமாகும். ஒரு ஹோட்டலில் நடப்பது போன்ற இந்த கதை எழுதப்பட்டிருக்கிறது. இந்த கதையை படித்த சிலருக்கு இரவில் தூக்கமே வரலையாம்!
The Exorcist: இந்த புத்தகத்திற்கு அர்த்தம், பேய் ஓட்டுபவர் என்பதுதான். ஒருவருக்குள் ஆவி புகுந்து விட, அதை விரட்ட வருபவர் குறித்த கதைதான் இது. இதனை வில்லியம் பீட்டர் ப்ளாட்லி எழுதியிருக்கிறார். பேய் புத்தகங்களை விரும்பி படிப்பவர்கள், தங்கள் ஃபேவரட் லிஸ்டில் இதை வைத்திருக்கின்றனர்.
Hell House : இந்த புத்தகத்தை ரிச்சர்ட் மாதீசன் எழுதியிருக்கிறார். ஒரு நகரில் இருக்கும் அரண்மனையில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள்தான் இந்த புத்தகத்தின் கதை.
IT: இந்த புத்தகமும் படமும் மிகவும் பிரபலமானதாகும். இந்த கதை, 4 டீன் ஏஜ் பருவத்தினரிடம் இருந்துதான் ஆரம்பிக்கும். இதில், Childhood trauma மற்றும் அதை சுற்றி இருக்கும் அமானுஷ்யங்களை பற்றி அதிகமாக பேசியிருப்பர்.
Dracula: ப்ராம் ஸ்டோக்கர் எழுதிய புத்தகம், ட்ராக்குலா. இதில், அமானுஷ்ய ஜீவராசியாக கூறப்படும் Vampire குறித்து எழுதியிருப்பார். சொல்லப்போனால், அந்த ரத்தம் குடிக்கும் அமானுஷ்ய சக்தியை இந்த உலகிற்கு தனது கதைகள் மூலம் அறிமுகப்படுத்தியதே இவர்தான்.
The Haunting Of Hill House : ஷிர்லீ ஜாக்சன் எழுதியிருக்கும் புத்தகம், ஹாண்டிங் ஆஃப் ஹில் ஹவுஸ். இதனை நெட்ஃப்ளிக்ஸ், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தொடராகவும் எடுத்தது. வீட்டை சீரமைக்கும் பணியை மேற்கொள்ளும் ஒருவர், தனது குடும்பத்தினருடன் ஒரு பெரிய பங்களாவிற்கு குடி வருகிறார். இந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்களும் அதனால் அந்த குடும்பத்தினர் சந்திக்கும், இழக்கும் விஷயங்களும்தான் கதை.