பிரபல இளம் நடிகருக்கு ஜோடியாகும் மிருணாள் தாகூர்..!

தெலுங்கில் பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்க இருக்கிறாராம். 

 

1 /6

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது குஷி படத்தில் நடித்து வருகிறார்.   

2 /6

இதையடுத்து மீண்டும் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் .  

3 /6

இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.   

4 /6

காதல் கதையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க இதுவரை அவருடன் இணைந்து நடிக்காத நடிகை நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் முடிவு செய்தனர்.   

5 /6

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சீதா ராமம் பட நடிகை மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

6 /6

இப்படத்தின் பூஜை ஐதராபாத்தில் நாளை(ஜூன் 14) நடைபெறலாம் என கூறப்படுகிறது.