Monkeypox Virus: குரங்கு அம்மை வைரஸ் என்னும் மங்கி பாக்ஸ், உலக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் வரை மங்கி பாக்ஸ் வந்து விட்டதால், இந்தியாவும் உயர் எச்சரிக்கை நிலையில் இருக்கிறது.
குரங்கு அம்மை வைரஸிற்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணில் ஈடுபட்டுள்ளதாக, கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி தயாரித்த சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக அளவில் குரங்கு அம்மை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்திய அரசு விழிப்புடன் பழைய எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாட்டின் காங்கோவில் தொடங்கிய குரங்கு அம்மை வைரஸ் தொற்று, ஸ்வீடன் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பரவியதுடன், நமது அண்டை நாடான பாகிஸ்தான் வரை வந்துவிட்டது. பாகிஸ்தானில் இதுவரை நான்கு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
Mpox தடுப்பூசி: குரங்கு அம்மை வைரஸிற்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணில் ஈடுபட்டுள்ளதாக, கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி தயாரித்த சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
குரங்கு அம்மை காய்ச்சலுக்கான தடுப்பூசி இதுவரை தயாரிக்கப்படவில்லை என்றாலும் பெரியம்மை வராமல் போடப்படும் தடுப்பூசி வைரஸிலிருந்து பாதுகாக்குமா என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துள்ளது.
குரங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளும், பெரியம்மை பாதிப்பிற்கான அறிகுறிகளும் ஒரே மாதிரி இருப்பதால், பெரியம்மை தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை வைரஸ் தாக்குதல் ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் பெரியம்மை தடுப்பூசி போட்டவர்களுக்கு குரங்கு அம்மை வைரஸ் தாக்குதல் வராது என்று கூற முடியாது. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Mpox தொற்று அறிகுறிகள்: குரங்கு வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின், கைகள், கால்கள், வாய் அல்லது பிறப்புறுப்புகளில் அரிப்பு ஏற்படும். இறுதியில் இவை கொப்புளங்களாக உருவாகின்றன. மேலும், தொடர் காய்ச்சல், தலைவலி, தசை வலி ஆகியவை இதன் மற்ற அறிகுறிகளாகும்.
குரங்கு அம்மை வைரஸ் தொற்று சிகிச்சை: MPOX க்கு இன்னும் குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும், உலக சுகாதார அமைப்பு (WHO) வலி மற்றும் காய்ச்சல் போன்ற அதன் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்து கொடுக்குமாறு பரிந்துரைக்கிறது. அவருக்கு கவனிப்பு மட்டுமே தேவைப்படும்.