பேஸ்புக் தனது தனியுரிமைக் கொள்கையில் மாற்றம் செய்திருப்பது பலருக்கு கவலை ஏற்படுத்தியிருப்பது. தரவு பகிர்வு குறித்த கட்டுப்பாடுகள், பயனர்களை பிற செய்தி செயலிகளுக்கு மாறுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
சிக்னல் (Signal) தனியுரிமையை மையமாகக் கொண்ட ஒரு செய்தியிடல் செயலியாகும். சில பயனர்கள் தங்கள் குழு உரையாடல்களை பிற செயலிகளில் இருந்து சிக்னலுக்கு மாற்றுவதில் சிக்கல் உள்ளது. எனவே உங்கள் வாட்ஸ்அப் தொடர்புகள் அனைத்தையும் சிக்னலுக்கு அழைப்பதற்கான வழிமுறைகள் இங்கே
Also Read | கைபடாமல் ATMஇல் இருந்து பணம் எடுக்க முடியுமா? முடியும் என்கிறது Intel
Signal செயலியை திறக்கவும்: Android அல்லது iOS சாதனத்தில் உங்கள் சிக்னல் செயலியைத் திறந்து, மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்யவும்.
Signal குழுவை உருவாக்கவும்: 'புதிய குழு' ('New Group') என்பதைத் தேர்ந்தெடுத்து, குறைந்தபட்சம் ஒரு உறுப்பினரையாவது அதில் சேர்க்கவும்.
Group லிங்க் settings திறக்கவும். பின்னர் குழு அரட்டையை மீண்டும் திறக்கவும், பின்னர் மீண்டும் மேல் வலது மூலையில் உள்ள மூன்று கோடுகளைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, குழு அமைப்புகளில் தட்டவும், பின்னர் 'குழு இணைப்பு' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
குழு இணைப்பை இயக்கி, share என்றத் தெரிவை கிளிக் செய்யவும் குழு இணைப்பை இயக்கி, share செய்யவும். மேலும், 'approve new members' தெரிவு இயக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும்.
பழைய செயலியில் இந்த குழு லிங்கைப் (group link) பகிரவும்