Most Romantic Zodiac Signs : காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை, வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. ஜோதிடத்தில், ஒவ்வொரு ராசியின் குணாதிசயங்களும் குறிப்பிடப்படுகின்றன, அதன்படி, சில ராசிகள் காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை அவரது வாழ்க்கையில் மிகவும் வெற்றி பெறும் நபர்களாக இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் நடத்தையால் காதல் துணையை எளிதில் வெல்வார்கள். காதலில் தங்கள் துணையை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கும் ஒரு அற்புதமான கலை இவர்களிடம் உள்ளது.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் வலிமையானவர்கள் ஆனால் தங்கள் துணையின் விஷயத்தில் மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் துணையின் அன்பைப் பெற எந்த எல்லைக்கும் செல்வார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் துணையை சந்தோஷப்படுத்த முயற்சிப்பார்கள்.
கடகம்: கடக ராசிக்காரர்கள் தங்கள் துணையை மிகவும் நேசிக்கிறார்கள். உறவை வலுப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்கவும், அவரை மகிழ்ச்சிப்படுத்தவும் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்.
ரிஷபம் : ரிஷபம் தங்கள் துணையை மிகவும் நேசிப்பதோடு, அதிகபட்ச நேரத்தை அவருடன் செலவிட முயற்சிப்பார்கள். இவர்கள் காதலில் விழுந்தால் காதலரை மிகவும் நன்றாக கவனித்து, எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்.
மேஷம்: செவ்வாயின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்கள் தைரியமும் பலமும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் காதல் விஷயத்தில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் துணையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள் (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளதன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)