மைக்ரோசாப்டின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ், தங்களது 27 ஆண்டுகால உறவு முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.
மைக்ரோசாப்டின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ், தங்களது 27 ஆண்டுகால உறவு முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து அனைவருக்கும் ஆச்சரியத்தையும் திகைப்பையும் ஏற்படுத்தியது. இவர்களைப் போல வரலாற்றில் மிகவும் அதிகம் பேசப்பட்ட விவாகரத்துகள் சில மிகவும் செலவு பிடிப்பதாகவும் இருந்திருக்கிறது. அவற்றில் சில…
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா இருவரும், தங்கள் கணக்குகளில் இருந்து ஒரே மாதிரியான ட்வீட்களை வெளியிட்டு, 27 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தாங்கள் பிரிந்து செல்வதன முடிவை உறுதிப்படுத்தினர்.
Also Read | நடிகை கங்கனா ரனாவத்தின் டிவிட்டர் கணக்கு முடக்கம்! காரணம் இது…
அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி பெசோஸ் ஆகியோர் 2019 ஆம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். அதே ஆண்டில் விவாகரத்தும் செய்தனர். மார்ச் மாதம், மெக்கென்சி ஸ்காட் (Jeff Bezos and MacKenzie Scott) சியாட்டில் அறிவியல் ஆசிரியர் டான் ஜுவெட்டை மறுமணம் செய்து கொண்டார். விவாகரத்து தீர்வின் ஒரு பகுதியாக, அமேசானில் 36 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள 4 சதவீத பங்குகளை அவர் பெற்றார்.
கூகிள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மற்றும் 23andMe நிறுவனர் அன்னே வோஜ்சிக்கி ஆகியோர் எட்டு வருட திருமண பந்தத்திற்குப் பிறகு 2015 ஆம் ஆண்டில் பிரிந்தனர். ஒரு பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி, இந்த ஜோடி விவகாரத்துக்கான செட்டில்மெண்ட் தீர்வை எட்டியது, அது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், பிரின்னிடம் தற்போது சுமார் 99 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உள்ளது.
வின் ரிசார்ட்ஸின் இணை நிறுவனர்களான ஸ்டீவ் மற்றும் எலைன் வின் ஆகியோர் 2010 இல் இரண்டாவது முறையாக விவாகரத்து செய்தனர். ஸ்டீவ் மற்றும் எலைன் இடையே எட்டப்பட்ட தீர்வின் ஒரு பகுதியாக, அந்த நேரத்தில் 795 மில்லியன் டாலர் மதிப்புள்ள காசினோ நிறுவனத்தின் 11 மில்லியன் பங்குகளைப் பெற்றார் Elaine. அதன் மதிப்பு இப்போது $2.3 பில்லியன் மதிப்புடையது.
சவூதி அரேபிய ஆயுத வியாபாரி அட்னான் கஷோகி 1974 ஆம் ஆண்டில் தனது மனைவி சாண்ட்ரா டாலியை விவாகரத்து செய்தார், அப்போதே அவர்களது விவாகரத்து செட்டில்மெண்ட் தொகை மொத்தம் 874 மில்லியன் டாலர் என்பது பரபரப்பாக பேசப்பட்டது.
பெர்னி எக்லெஸ்டோன் மற்றும் ஸ்லாவிகா ரேடிக் ஃபார்முலா ஒன் நிர்வாகி பெர்னி எக்லெஸ்டோன், யுனைடெட் கிங்டத்தின் பணக்காரர்களில் ஒருவரான குரோஷிய மாடல் ஸ்லாவிகா ரேடியை 2009 இல் விவாகரத்து செய்தார். விவாகரத்து செட்டில்மெண்ட் 1.2 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டது. அவர்களின் விவாகரத்து தீர்வுத்தொகை தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் எக்லெஸ்டோனுக்கு பணம் கொடுக்கிறார் Radić என்று தெரிகிறது.