3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, அட்டகாசமான பொற்காலம்

Sukran Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜனவரி 18, 2024 அன்று சுக்கிரன் தனது ராசியை மாற்றுகிறார். அன்றைய தினத்தில் சுக்கிரன் தனுசு ராசிக்குள் நுழைகிறார். ஜனவரி 18ம் தேதி இரவு 08:56 மணிக்கு சுக்கிரன் பெயர்ச்சி நடக்கும்.

Sukran Peyarchi: சுக்கிரன் ஆற்றல், அழகு மற்றும் அன்பின் காரணியாக கருதப்படுகிறார். ஒரு நபரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், அந்த நபர் வாழ்க்கையில் திருப்தியையும், நல்ல ஆரோக்கியத்தையும், கூர்மையான புத்திசாலித்தனத்தையும் பெறுகிறார்.  சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். சில ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும். சிலருக்கு பிரச்சனைகள் தலைதூக்கும். 12 ராசிகளிலும் (Zodiac Signs) சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /13

சுக்கிரனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கப் போகிறது. இந்த பெயர்ச்சியால் பல நல்ல செய்திகள் கிடைக்கும். உங்களின் கடின உழைப்பின் பலன் நிச்சயம் கிடைக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள்.

2 /13

இந்தப் பெயர்ச்சியின் போது ரிஷபம் ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரலாம். பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அதிக செலவு செய்வதை தவிர்க்கவும், இல்லையெனில் நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

3 /13

மிதுன ராசிக்காரர்கள் புதன் பெயர்ச்சியின் போது சில நல்ல செய்திகளைப் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் இருந்து பரிசு கிடைக்கும். உங்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். வீட்டில் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும்.

4 /13

கடக ராசி உள்ளவர்களுக்கு இந்த பெயர்ச்சி அத்தனை நல்லதாக கூறப்படவில்லை. பண பரிவர்த்தனைகளைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். உங்களுக்கு நெருக்கமான யாரையும் நம்பாதீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

5 /13

இந்த பெயர்ச்சியின் பலனால் சிம்ம ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உங்களின் கடின உழைப்பின் பலன் நிச்சயம் கிடைக்கும். தொழில் துறையில் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள்.

6 /13

கன்னி ராசி உள்ளவர்கள் இந்தப் பெயர்ச்சியின் போது நல்ல பலன்களை மட்டுமே பெறுவார்கள். இந்தப் பெயர்ச்சி காரணமாக உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உங்கள் பணியை மேலதிகாரி பாராட்டுவார். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள்.

7 /13

துலாம் ராசிக்காரர்கள் இந்தப் பெயர்ச்சியின் போது கவனமாக இருக்க வேண்டும். விவாதத்திலிருந்து விலகி இருங்கள். யாரிடமும் வாக்குவாதம் வேண்டாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். எந்த ஒரு வேலையையும் தொடங்கும் முன், கண்டிப்பாக பெற்றோரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

8 /13

விருச்சிக ராசிக்காரர்கள் இந்தப் பெயர்ச்சியின் போது சில இழப்புகளைச் சந்திக்க நேரிடும். புதிய வேலைகளை தொடங்க நினைத்தால் அதை இப்போதைக்கு ஒத்திவைக்கவும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். எண்ணெய் உணவுகளை வெளியில் இருந்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.

9 /13

தனுசு ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இந்த பெயர்ச்சியின் போது, ​​அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஒரு பெரிய ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்தாகும். இதனால் பெரும் நிதி ஆதாயங்களைப் பெறப் போகிறீர்கள். பல நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்போது திரும்பக் கிடைக்கும்.

10 /13

மகர ராசி உள்ளவர்களுக்கு இந்த பெயர்ச்சி கலவையான பலன்களை அளிக்கும். இந்த பெயர்ச்சியின் தாக்கத்தால் நீங்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், கண்டிப்பாக பெரியவர்களின் கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.  

11 /13

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும். இந்தப் பெயர்ச்சியின் போது நேர்மறையான முடிவுகளைக் காண்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும். பணியிடத்தில் ஆதாயங்களைப் பெறுவீர்கள். நிதி ஆதாயம் உண்டாகும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

12 /13

மீன ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி சற்று தொந்தரவாக இருக்கும். இதனால் வரும் பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் சில சச்சரவுகளும் வரலாம். இருப்பினும், மாணவர்களுக்கு நேரம் சாதகமாக உள்ளது.

13 /13

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.