வக்ர சனியால் இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்... அமர்க்களமாய் வாழ்வார்கள்!!

Shani Vakri 2023: வேத ஜோதிடத்தில், சனி கிரகம் பெரும் செல்வாக்கு உடையதாக கருதப்படுகிறது. சனி பகவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கிறார். 

நீதியின் கடவுள் என அழைக்கப்படும் சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். சனி பகவானின் ராசி மாற்றங்களும், இயக்க மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

1 /8

சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். அவர் மற்ற கிரகங்களைக் காட்டிலும் ராசிகளில் அதிக காலம் இருப்பதால், அவர் உருவாக்கும் தாக்கமும் அதிகமாக இருக்கும்.

2 /8

சனி பகவான் சமீபத்தில் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். சனியின் வக்ர நிலை பல வித மாற்றங்களையும், சுப, அசுப விளைவுகளையும் ஏற்படுத்தும். 

3 /8

சனி பகவானின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

4 /8

சனி வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு அந்தஸ்தும் செல்வமும் பெருகும். துறையில் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில், திடீர் பண ஆதாயமும் கிடைக்கும்.   

5 /8

மகரம்: உங்கள் வாழ்க்கையில் வரும் காலங்களில் பணப் பற்றாக்குறையை உணர மாட்டீர்கள். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு சனி பகவான் பல வாய்ப்புகளைப் பெற்றுத்தருவார். வியாபாரத்தில் இருப்பவர்களும் நல்ல லாபம் பெறுவார்கள். 

6 /8

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர இயக்கம் மிகவும் மங்களகரமானதாகவும் வெற்றிகள் நிறைந்ததாகவும் இருக்கும். உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் போது, ​​சனி ஜாதகத்தில் சஷ ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதன் மூலம் அடுத்த சில மாதங்களில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் பண ஆதாயத்திற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். 

7 /8

சனி பகவான் பொதுவாக மனிதர்களை பாதிக்கும் ஏழரை சனி, சனி தசை ஆகியவற்றின் தாக்கத்தில் உள்ளவர்கள் அவர் அருளை பெற, கோளறு பதிக, சனி சாலிசா ஆகிய ஸ்தோத்திரங்களை சொல்லலாம். ஏழைகளுக்கு உதவினாலும் சனி மகிழ்ச்சி அடைகிறார்.  

8 /8

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.