இன்னும் 4 நாட்களில் சனி உதயம்.. இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்

Shani Uday 2024: ஜோதிடத்தின் படி, சனி நீதியின் கடவுளாக பார்க்கப்படுகிறார். அந்த வகையில் இன்னும் 4 நாட்களில் அதாவது வரும் மார்ச் 18 ஆம் தேதி கும்ப ராசியில் சனி உதயமாகப் போகிறார், இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ப்ரமோஷன், சம்பள உயர்வு, சுப நிகழ்வு, பண வரவு கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Shani Uday 2024: நியாய தேவன் சனி பகவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கப்பவர். தற்போது சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். முன்னதாக பிப்ரவரி 11 ஆம் தேதி கும்ப ராசியில் சனிபகவான் அஸ்தமன நிலைக்கு சென்றார். தற்போது இன்னும் 4 நாட்களில் அதாவது வரும் மார்ச் 18, 2024 கும்ப ராசியில் சனி உதயமாகப் போகிறார். இதனால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1 /6

மேஷ ராசிக்காரர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். வெற்றி அலை வீசும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு, பதவி உயர்வு பெறலாம். வியாபாரத்தில் நிறைய லாபத்தை பெறுவீர்கள்.  

2 /6

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் நிறைவேறும். இனிவரும் காலம் ரிஷப ராசிக்கு சாதகமாக இருக்கும்.

3 /6

கன்னி ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலன் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அனைத்து துறையிலும் வெற்றி கிடைக்கும். கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும். செல்வம் பெருகும். இடமாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் சம்பளம் உயரும்.

4 /6

துலாம் ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட பலனை பெறுவார்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் திருப்தி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களை பெறலாம். கடன் தொல்லை நீங்கும், வெற்றி கிடைக்கும்.  

5 /6

தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மை பலன் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க ஏற்ற காலம். நல்ல செய்திகள் உங்களைத் தேடு வரலாம். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். இந்த மாதம் இறுதிக்குள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சுப செய்திகளை பெறலாம்.  

6 /6

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.