UIDAI | ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி.. மோடி அரசு முக்கிய அறிவிப்பு

Aadhaar Card Latest News: ஆதார் அட்டை புதுப்பிப்புக்கான கடைசி தேதி மாற்றம். 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு கடைசி தேதி 14 ஜூன் 2025 என நிர்ணயம்.

Aadhaar Update Date Extended: ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மோடி அரசாங்கம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 10 வருடங்களுக்கு மேல் அப்டேட் செய்யப்படாமல் இருக்கக்கூடிய ஆதார் விவரங்களை அப்டேட் செய்ய காலக்கெடு நீட்டிப்பு.

1 /9

ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி.. மோடி அரசு முக்கிய அறிவிப்பு

2 /9

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மீண்டும் ஆதார் அட்டை புதுப்பிப்பு காலக்கெடுவை 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது, இது மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

3 /9

முன்னதாக, ஆதார் அட்டை புதுப்பிப்புக்கான கடைசி தேதி 14 டிசம்பர் 2024 என நிர்ணயிக்கப்பட்டு இருந்து. தற்போது அது 14 ஜூன் 2025 என நீட்டிக்கப்பட்டு உள்ளது.

4 /9

முன்னதாக, ஒவ்வொரு முறையும் ஆதார் புதுப்பிப்பதற்கான காலக்கெடு மூன்று மாதங்களாக இருந்தது. ஆனால் இந்த முறை மத்திய அரசாங்கம் அதை 6 மாதங்களாக நீட்டித்துள்ளது. இந்த தகவலை யுஐடிஏஐ (UIDAI) தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

5 /9

ஆதார் அட்டையை அப்டேட் செய்ய உங்களுக்கு இரண்டு முக்கியமான ஆவணங்கள் தேவைப்படும். ஒன்று அடையாள அட்டை மற்றும் இரண்டாவது முகவரி சான்று. வழக்கமாக, ஆதார் அப்டேட் செய்ய ஆதார் மையத்தில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் யுஐடிஏஐ (UIDAI) அளித்துள்ள தகவலின் படி, இந்த சேவை ஜூன் 14, 2025 வரை இலவசமாக பெறலாம். அடையாளச் சான்றாக பான் கார்டையும், முகவரி சான்றாக வாக்காளர் அட்டையையும் கொடுக்கலாம்.

6 /9

ஆதாரில் உள்ள விவரங்களை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக இலவசமாக அப்டேட் செய்துக்கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை அறிந்துக்கொள்ளுங்கள்.

7 /9

முதலில் myaadhaar.uidai.gov.in என்ற UIDAI வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும். அப்டேட் பிரிவில் காணப்படும் "அப்டேட் யுவர் ஆதார்" என்பதன் கீழ் உள்ள "மை ஆதார்" என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். "அப்டேட் ஆதார் டீடைல்ஸ்" (ஆன்லைன்) என்பதை கிளிக் செய்து "டாக்குமெண்ட் அப்டேட்ஸ்" என்பதை தேர்வு செய்ய வேண்டும். ஆதார் நம்பர், கேப்சாவை நிரப்பி "சென்ட் ஓடிபி (OTP)" என்பதை கிளிக் செய்யவும், பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி (OTP) வரும், அதை சரியாக நிரப்பிய உடன், உங்களுடைய பெயர் அல்லது முகவரி போன்ற அப்டேட் செய்யப்பட வேண்டிய விவரங்கள் தேர்வு செய்யுங்கள். ஆதாரில் உள்ள விவரங்களை அப்டேட் செய்த பிறகு, அதற்கான டாக்குமெண்ட்டையும் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்து சம்மிட் (Submit) என்பதைக் கிளிக் செய்யவும்.

8 /9

ஆதார் அட்டையில் உங்கள் கருவிழி, கைரேகைகள், மொபைல் நம்பர் அல்லது புகைப்படம் போன்றவற்றை ஆஃப்லைன் மூலமாக மட்டுமே உங்களால் அப்டேட் செய்ய முடியும்.

9 /9

பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்றவற்றை ஒருமுறை மட்டுமே நீங்கள் ஆதரில் அப்டேட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.