விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ள மலையாள திரைப்படங்கள்!

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், ஜியோசினிமா போன்ற பிரபல ஓடிடி தளங்களில் பலரும் எதிர்பார்க்கும் சில மலையாள படங்கள் வெளியாக உள்ளன. 

 

1 /5

ஆடுஜீவிதம், மஞ்சுமேல் பாய்ஸ், ஆவேசம் என சமீபத்தில் வெளியான பல மலையாள படங்கள் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் இந்த படங்கள் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பதை பார்ப்போம்.  

2 /5

ஆடுஜீவிதம் சவூதி அரேபியாவில் அடிமையாகத் தள்ளப்பட்ட நஜீப் என்ற தொழிலாளியின் உண்மைக் கதையைச் சொல்லும் படம்  தான் ஆடுஜீவிதம் ஆகும். பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியான இந்த படம் டிஸ்னிஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

3 /5

ஆவேஷம் ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபஹத் பாசில், ஹிப்ஸ்டர், மிதுன் ஜெய் சங்கர் மற்றும் ரோஷன் ஷானவாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ஆவேஷம். இந்த படம் விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

4 /5

அஞ்சக்கல்லக்கோக்கன் இந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படம் அஞ்சக்கல்லகொக்கன். கொலையை சுற்றி உள்ள மர்மங்களை கொண்டு படம் உருவாகி உள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் விரைவில் வெளியாக உள்ளது.

5 /5

மஞ்சுமெல் பாய்ஸ் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படம் தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தியது.  இந்த படம் விரைவில் டிஸ்னிஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.