சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு நம்ப முடியாத நற்பலன்கள்.. பணம், புகழ் சேரும்

Sani Peyarchi, Impact on Zodiac Signs: நீதியின் கடவுள் என அழைக்கப்படும் சனி பகவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கிறார். அவர் மிகவும் முக்கியமான கிரகமான கருதப்படுகிறார். 

சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் சஞ்சரிக்கிறார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது சொந்த ராசியில் உள்ளார். சனி பகவானின் சஞ்சாரம் பல ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. சனி பகவான் தற்போது வக்ர இயக்கத்தில் உள்ளார். தீபாவளிக்கு முன் சனி தனது திசையை மாற்றி நவம்பர் 4ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து கிரகங்களிலும் காணப்படும். எனினும், 4 ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அபரிமிதமான நற்பலன்களை அள்ளி வழங்கவுள்ளார். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /9

சனி பகவான்: அனைத்து கிரகங்களிலும் மிகவும் முக்கியமான கிரகம் சனி. இவர் மிக மெதுவாக நகர்வதால், ராசிகளில் இவரது தாக்கமும் மிக அதிகமாக இருக்கும்.  

2 /9

சனி வக்ர நிவர்த்தி: சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். அவர் தீபாவளிக்கு முன் வக்ர நிவர்த்தி அடைவார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.  

3 /9

ராசிகளில் தாக்கம்: சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்களுக்க் இது மிக நல்ல நேரமாக இருக்கும். இவர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

4 /9

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனி கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதால், மிகுந்த நன்மைகள் உண்டாகும். ப்ராபர்டி சம்பந்தமான தொழிலில் ஈடுபடுபவர்கள் அபரிமிதமான செல்வத்தைப் பெறுவார்கள். இவர்கள் எடுத்த அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக நிறைவடையும். அனைத்திலும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமுதாயத்தில் மரியாதை கூடும். பணவரவு அதிகரிக்கும்.

5 /9

ரிஷபம்: ஜோதிட சாஸ்திரத்தின்படி சனி வக்ர நிவர்த்தி இவர்களுக்கு  2024 வரை அதிர்ஷ்டத்தைத் தரும். ரிஷப ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறலாம். இந்த காலகட்டத்தில் நம்பிக்கை அதிகரிக்கிறது. எந்தவொரு புதிய திட்டத்திலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் மூலம் உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய தொழில் மற்றும் புதிய வேலை தேடுபவர்கள் இந்த காலகட்டத்தில் வெற்றி பெறுவார்கள்.

6 /9

மிதுனம்: இந்த நேரம் 2024 வரை மிதுன ராசியினருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரும். நவம்பர் 4-ம் தேதிக்குப் பிறகு அனைத்து வேலைகளிலும் வெற்றி உண்டாகும். அதே சமயம் சிறிய கடின உழைப்பு நிச்சயம் பலன் தரும். திடீர் பண ஆதாயம் மற்றும் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் ஏதேனும் சட்ட தகராறில் இருந்தால், முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். 

7 /9

கன்னி: சனி பகவானின் வக்ர நிவர்த்தி கன்னி ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இவர்கள் பணியிடத்தில் நல்ல செய்திகளைப் பெறலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்கள் லாபம் அடைவார்கள். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். கன்னி ராசிக்காரர்களின் மாத வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தின் மொத்த பண வரவும் அதிகரிக்கும்.

8 /9

துலாம்: துலாம் ராசிக்கு 2024 வரை நல்ல நேரம். இந்த காலகட்டத்தில் அவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். திடீரென்று அதிக பணம் கிடைக்கும். பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். இந்த காலகட்டத்தில், தொழிலதிபர்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவார்கள்.

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைன்யுள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.