குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்ற கிரிக்கெட் வீரர்களை காட்டிலும் அழகழகான கண்ணைக்கவரும் விதமான கார்களை வைத்திருக்கிறார்.
சமீபத்தில் இவரின் கார் கலெக்ஷனில் இடம்பெற்றிருப்பது லம்போர்கினி ஹுராகன் இவிஓ கார். ஆரஞ்சு நிறத்தில் உள்ள இந்த கார் V10 பெட்ரோல் எஞ்சின் மூலம் அதிகபட்சமாக 638 bhp மற்றும் 600 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த காரின் விலை சுமார் ரூ.3.73 கோடி ஆகும்.
இவர் ஆடி ஏ6 சொகுசு செடான் காரை, ஆடி இந்தியாவின் முன்னாள் தலைவர் ரஹில் அன்சாரி கையால் வாங்கினார்.
ஹர்திக் பாண்டியா வைத்திருக்கும் சொகுசு கார்களில் மெர்சிடஸ்-பென்ஸ் ஏஎம்ஜி ஜி 63 எஸ்யூவி-யும் ஒன்றாகும். பளபளப்பான மெட்டாலிக் பெயிண்ட் பூசப்பட்ட இந்த கார் ரூ.2.19 கோடியாகும்.
பல பிரபலங்கள் விரும்பும் ரேஞ்ச் ரோவர் வோக் ஹர்திக் பாண்டியாவின் கார் கலெக்ஷனில் இடம்பெற்றுள்ளது. இந்த வெள்ளை நிற எஸ்யூவி-யின் விலை ரூ.2.31 கோடியாகும்.
ஹர்திக் பாண்டியா சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது, இருப்பினும் அவர் இதுவரை அந்த காரின் புகைப்படம் எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.