குரு நட்சத்திர பெயர்ச்சி: குரு பார்வை பெற்று இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை பொங்கும்

தேவர்களின் குருவான குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது ராசியை மாற்றும். இது தவிர நட்சத்திரங்களையும் மாற்றுவார். தற்போது செவ்வாய் ஆளும் மேஷ ராசியில் பயணித்து வரும் குரு பகவான் பிப்ரவரி மாதம் சதய நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார். இந்த சதய நட்சத்திரத்தில் ஏப்ரல் மாதம் 06 ஆம் தேதி வரை பயணிப்பார். 

குரு பகவான் பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் 06 ஆம் தேதி வரை சதய நட்சத்திரத்தில் பயணிப்பார். அதன் பின் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வார். குரு பகவானின் இந்த நட்சத்திர மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏப்ரல் மாதம் பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழையும் குரு பகவான், அக்டோபர் வரை இருப்பார். இந்த குரு நட்சத்திர பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. எனவே குரு பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

1 /6

குரு நட்சத்திர பெயர்ச்சி பல ராசிகளுக்கு அற்புதங்களை செய்யும். கிரகங்களின் நிலைகள், இயக்கங்கள், மாற்றங்கள் ஆகியவற்றை பொறுத்து இதில் பல நிகழ்வுகள் கணிக்கப்படுகின்றன. இவை மிகவும் துல்லியமான கணிப்புகளாக இருக்கின்றன. ஜோதிட கணக்கீடுகளின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. 

2 /6

குரு நட்சத்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். வருமான பெருகும். நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். அலுவலகத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடக்கும். சம்பள உயர்வு கிடைக்கலாம்.

3 /6

குரு நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை தரும். தொழிலில் தொல்லைகள் நீங்கி அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 

4 /6

குரு நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவேறும். கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். வெளியூர் பயணத்தை மேற்கொள்ளலாம். உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியர்களின் முழு ஆதரவு கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும்.

5 /6

குரு பகவானின் முழுமையான அருள் பெற இந்த ஸ்லோகத்தை செய்யலாம். "குரு பிரம்மா, குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வர; குரு சாக்‌ஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ; குரவே சர்வ லோகானாம் பிஷஜே பவ யோகினாம் நிதயே சர்வ வித்யானாம் ஸ்ரீ தக்‌ஷிணாமூர்த்தயே நமஹ"

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.