Love Marriage @Sweet 60: அறுபது வயதாகும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இன்னும் சில நாட்களில் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளார். இது அறுபதாம் வயதில் செய்துக் கொள்ளும் சஷ்டியப்தபூர்த்தி திருமணமல்ல, தனது நீண்ட நாள் காதலியை கைபிடிக்கப் போகும் ஒரு காதலனின் மகிழ்ச்சியான திருமணச் செய்தி இது.
காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியன்று ஆஸ்திரேலிய பிரதமர் தனது அதிகாரப்பூர்வ கான்பெரா இல்லத்தில் தனது காதலிக்காக பிரத்யேகமாக வடிவமைத்த மோதிரத்தை திருமண மோதிரத்தை அணிவித்து திருமணத்தை உறுதி செய்தார்.
60 வயதான அந்தோனி அல்பானீஸ் மற்றும் 45 வயதான ஹெய்டன் ஆகியோர் 2020 இல் மெல்போர்னில் சந்தித்தனர். பழக்கம், நட்பாகி, காதலாகி, தற்போது காதல் கனிந்து திருமணமாக மலரப் போகிறது. பதவியில் இருக்கும் போது நிச்சயதார்த்தம் செய்து கொண்ட முதல் ஆஸ்திரேலிய தலைவர் அந்தோனி அல்பானீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் ஒரு செல்ஃபி புகைப்படத்தைப் பதிவிட்ட அந்தோனி அல்பானீஸ், "அவள் ஒத்துக் கொண்டாள்..." என சுருக்கமாக செய்தியை தெரிவித்தார். பின்னர் வெளியிட்ட ஒரு வீடியோவில், விளக்கமாக திருமணச் செய்தியைப் பகிர்ந்துக் கொண்டார். "இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம், வாழ்க்கை முழுவதும் ஒருவரும் ஒன்றாகக் கழிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். எங்களுக்கு ஏற்ற ஒருவரை தேடிக் கண்டுபிடித்த நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்" என்று காதல் ஜோடி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரதமராக உள்ள ஒருவர், தனது பதவிக் காலத்தில் காதலியை திருமணம் செய்துக் கொள்வது பலருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸுக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. முன்னாள் மனைவி, நியூ சவுத் வேல்ஸ் துணைப் பிரதமர் கார்மெல் டெபுட், அவரை 19 வருட திருமணத்திற்குப் பிறகு 2019 இல் பிரிந்தார் அல்பனீஸ் என்பதும், இந்தத் தம்பதிகளுக்கு நாதன் அல்பனீஸ் என்ற 23 வயதான மகன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திலும், பிரதமராக பதவியேற்ற பிறகு மேற்கொண்ட சர்வதேசப் பயணங்களிலும் இருவரும் ஒன்றாக பயணித்துள்ளனர். இந்தியா, துபாய், மேட்ரிட், பாரீஸ், லண்டன் என பல நாடுகளுக்கும் இருவரும் அலுவல்ரீதியாக ஒன்றாக பயணித்துள்ளனர்.
லேபர் கட்சித் தலைவராக இருந்த அந்தோனி அல்பானிஸ் மற்றும் ஹெய்டன் எப்படி சந்தித்தார்கள்? முதலில் ஒரு விருந்தில் சந்தித்தனர். நிதிச் சேவைத் துறையில் பணிபுரியும் ஹெய்டனுக்கும், அந்தோனிக்கும் ரக்பி விளையாட்டு மிகவும் பிடித்தமானது. இந்த விருப்பம் அவர்களை நெருக்கமாக்கியது.
பிரதமர் ஆண்டனியின் காதல் திருமணச் செய்தியைக் கேட்டதும், எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன், கதல் ஜோடிக்கு நாடாளுமன்றத்திலேயே வாழ்த்துகளை தெரிவித்தார்