Serious Side Effecs of Alcohol Addiction: குடிப்பது தவறு என்று கூறும் காலம் மலையேறிவிட்டது. குடி என்பது ஒழுக்கக்கேடான செயல் என்ற நிலை மாறி, மது அருந்தவில்லை என்றால் கிண்டல் செய்யும் அளவுக்கு நாம் முன்னேறி விட்டோம்.
கல்யாணம் என்றாலும் குடிப்பது, கருமாதி என்றாலும் குடிப்பது, காதுகுத்து, பிறந்தநாள் என சந்தோஷ நாட்கள் மட்டுமல்லாது, வேலை இழப்பு, காதல் தோல்வி என துக்க நாட்களிலும் குடி என மது அருந்துபவர்கள் கூட்டம் இன்று பெருகிவிட்டது.
மது அருந்தும் பழக்கம்: எதுவுமே அளவோடு இருந்தால் தவறில்லை. இப்போதாவது ஒருமுறை மது அருந்தினால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. ஆனால் மதுவைப் பற்றிய சிந்தித்து, அளவிற்கு அதிகமான மது அருந்துபவர்கள், தங்கள் வாழ்வையும் கொடுத்து தங்களை சார்ந்து இருப்பவர்கள் வாழ்வையும் கெடுக்கிறார்கள்.
கல்லீரல் பாதிப்பு: மது அருந்துவதால் ஏற்படும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது கல்லீரல். பாட்டி லிவர் அல்லது லிவர் சரோசஸ் ஏற்பட்டு மிக முக்கிய நிலையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்கலாம் என்ற நிலை ஏற்படுகிறது.
நரம்புகள் பாதிப்பு: அளவிற்கு மிஞ்சிய மதுவினால் சிந்திக்கும் திறன் இல்லாமல் போய்விடும். மேலும் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதால் கை கால்களில் நடுக்கம், அல்லது எரிச்சல் போன்றவை ஏற்படும்.
மூட்டு வலி: மது எலும்புகளில் உள்ள கால்சியம் சத்தை உணர்ந்து உறிஞ்சி, பலவீனப்படுத்துகிறது. இதனால் மூட்டு வலி மற்றும் பாஸ்டியோ ப்ரோசிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதோடு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் என்பதால், மூட்டு வலி ஏற்படும்.
பக்கவாதம்: அளவிற்கு அதிகமாக மது அருந்துபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம். ஆல்கஹால் ரத்தக் குழாய்களை பாதித்து உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு உக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
புற்றுநோய்: மதுபானத்தில் உள்ள அசிடால்டிஹைடு உள்ளது. இது இது புற்றுநோய் ஏற்படுத்தும். இரைப்பை கல்லீரல் உணவு குழாய்களில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
கணைய அழற்சி: அளவிற்கு மிஞ்சிய மது கணையத்தில் உள்ள பீட்டா செல்களை அழித்துவிடும். இதனால் கணைய வளர்ச்சி ஏற்படும். மேலும் இதனால் இன்சுலின் சுரப்பி சரியாக வேலை செய்யாமல் சர்க்கரை நோய் ஏற்படும்.
ஊட்டச்சத்து குறைபாடு: அளவுக்கு மிஞ்சிய மது, உடலில் ஊட்டச்சத்துக்கள், குறிப்பாக வைட்டமின்கள் கிரகிக்கப்படுவதை தடுக்கும். அதோடு மது அருந்துவதால், சாப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போகும் நிலையில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். இதனால் சோர்வு அதிகலம் ஏற்படும். உடல் பலவீனமடையும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)