அரசாங்கம் மூத்த குடிமக்களின் ஓய்வூதிய காலத்தில் அவர்களின் நிதி தேவைகளை சமாளிக்க PMVVY என்கிற சிறந்த திட்டத்தை பல்வேறு சலுகைகளுடன் வழங்குகிறது.
மூத்த குடிமக்கள் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனாவில் (PMVVY) திட்டத்தின் கீழ், 60 வயதிற்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் ரூ.18500 ஓய்வூதியம் பெறமுடியும்.
PMVVY திட்டம் மூலமாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அரசாங்கம் மானியத்துடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்குகிறது.
மூத்த குடிமக்களுக்கான இந்தத் திட்டத்தின் காலம் மொத்தம் 10 ஆண்டுகள்.
இந்தத் திட்டத்தின் பலனை முழுமையாக பெற விரும்புபவர்கள் மொத்தமாக ரூ.15 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.
இந்த திட்டத்தில் மாதந்தோறும் குறைந்தபட்ச முதலீடாக ரூ 1000 மற்றும் அதிகபட்ச முதலீடாக மாதம் ரூ 9250 வரை செலுத்தலாம்.