டான் பட இயக்குநருக்கு திருமணம்! விழாவை சிறப்பித்த சிவகார்த்திகேயன்...வைரல் போட்டோஸ்!

Director Cibi Chakaravarthi Wedding Photos : டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், நடிகர் சிவகார்த்திகேயன் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

Director Cibi Chakaravarthi Wedding Photos : 2 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி, பெரிய ஹிட் அடித்த படங்களுள் ஒன்று, டான். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருந்தார். சமுத்திரகனி, சிவாங்கி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம், சிவகார்த்திகேயனுக்கு கடைசி ஹிட் படமாக அமைந்ததாக கூறப்படுகிறது. தற்போது, டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்கு திருமணம் நடைப்பெற்றிருக்கிறது. அந்த வைரல் புகைப்படங்களை இங்கு பார்ப்போம். 

1 /8

டான் படத்தை இயக்கியவர், சிபி சக்ரவர்த்தி. இவர் முதன் முதலில் இயக்கிய படமே இதுதான். 

2 /8

2022ஆம் ஆண்டு வெளியான டான் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். சிபியின் உண்மையான கதையை வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

3 /8

தற்போது, மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் இவர் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. 

4 /8

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறாராம். ரம்யா கிருஷ்ணன் அம்மாவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. 

5 /8

சிபி சக்ரவர்த்திக்கு, திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அவர் வர்ஷினி என்பவரை திருமணம் செய்திருக்கிறார். 

6 /8

சிபி-ரோஷினியின் திருமண வரவேற்பில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

7 /8

இந்த விழாவில் சிவகார்த்திகேயன், சிவாங்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர். 

8 /8

சிபியின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.