47 வயதில் அப்பா ஆகும் பிரபல நடிகர்? திருமணமான 1 வருடத்தில் நல்ல செய்தி..

Actor Redin Kingsley Sangeetha Rumored To Have Baby :  தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் ரெடின் கிங்க்ஸ்லி, விரைவில் தந்தையாக இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. 

Actor Redin Kingsley Sangeetha Rumored To Have Baby : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர், ஜெயிலர் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர், ரெடின் கிங்க்ஸ்லி. இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இதையடுத்து இவர்கள் விரைவிலேயே நல்ல செய்தி சொல்ல வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

1 /7

கோலிவுட் திரையுலகில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் காமெடி நடிகராக இருக்கிறார், ரெடின் கிங்க்ஸ்லி. இவரது ஸ்பெஷலான வசன உச்சரிப்புகள் இவர் காமெடிக்கு பலமாக அமைந்திருக்கிறது. 

2 /7

ரெடின் கிங்ஸ்லி-நெல்சன் திலீப்குமார், கவின் ஆகியோர் ஒரே நட்பு வட்டாரத்தை சேர்ந்தவர்கள். சமீபத்தில் இவர்கள் ப்ளடி பெக்கர் படத்தில் ஒன்றாக பணியாற்றி இருந்தனர். 

3 /7

பல ஆண்டுகள் முயற்சிக்கு பிறகு, தற்போது திரைத்துறையில் பெரிய நிலைக்கு வந்திருக்கும் இவர், கடந்த ஆண்டு சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். 

4 /7

சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது. 

5 /7

சங்கீதா-ரெடின் திருமணத்தின் போதே பலர் இவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். தற்போது இவர்களின் வீட்டிலிருந்து இன்னொரு நல்ல செய்தி வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

6 /7

சங்கீதா-ரெடின் ஜோடி, இந்த விஷயம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. 

7 /7

இந்த ஜோடிக்கு ரசிகர்கள் பலர், தற்போது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.