கில்லி படத்தில் த்ரிஷாவுக்கு பதில் ‘இவர்’ நடிக்க வேண்டியது!! யார் தெரியுமா?

Ghilli Movie First Choice Before Trisha : 2004ஆம் ஆண்டு வெளியாகி, ஹிட் அடித்த படம் கில்லி. இதில் த்ரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார். இவருக்கு பதில், இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? 

Ghilli Movie First Choice Before Trisha : விஜய்-த்ரிஷா நடிப்பில் முதன் முதலாக வெளியான படம், கில்லி. 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை தரணி இயக்கியிருந்தார். தெலுங்கில் ஒக்கடு என்ற பெயரில் வெளியான படத்தைதான், தமிழில் கில்லியாக ரீ-மேக் செய்தனர். இந்த படம் வெளியான போது பெரிய ஹிட் அடித்தது. இதைத்தாண்டி, ரீ-ரிலீஸின் போதும் படம் 50 நாட்களை கடந்து தியேட்டர்களில் ஓடியது. இந்த நிலையில், இதில் த்ரிஷா கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. 

1 /8

2004ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம், 20 வருடங்கள் கழித்து மீண்டும் ரீ-ரிலீஸ் ஆனது. அப்போதும் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. 

2 /8

கில்லி திரைப்படத்தில், த்ரிஷா தனலக்‌ஷ்மி என்ற நாயகியின் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? 

3 /8

ஜெமினி, வின்னர் போன்ற படங்களில் நாயகியாக நடித்து பிரபலமான கிரண்தான் கில்லி படத்தில் த்ரிஷாவின் கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் பரிந்துரைக்கப்பட்டாராம். 

4 /8

கில்லி பட வாய்ப்பு வந்தபோது, கிரண் வேறு ஒருவரை காதலித்து வந்தாராம். அதனால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் இருந்திருக்கிறார். 

5 /8

இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருந்த கிரண், தான் காதலித்த நபர் திரையுலகை சேர்ந்தவர் இல்லை என்றும், இதனால் கில்லி பட வாய்ப்பை தவற விட்டதாகவும் பேசியிருக்கிறார். இந்த நேர்காணல், கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் சமயத்தில் வைரலானது. 

6 /8

கிரண், கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். 

7 /8

இவர், தமிழில் ‘ஆம்பள’ படம் மூலம் கம்-பேக் கொடுத்தார். அதன் பிறகும் இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் அவை வந்த சுவடு தெரியாமல் சென்று விட்டன. 

8 /8

கிரண், தற்போது இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாகி சுய தொழில் ஒன்றை செய்து வருவதாக கூறப்படுகிறது.