உச்ச கட்டத்தை தொட்ட தங்கத்தின் விலை சுமார் ரூ ₹8000 குறைந்துள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை தொடர்ந்து ₹50,000 என்ற அளவிற்கு கீழே தான் உள்ளது.
உச்ச கட்டத்தை தொட்ட தங்கத்தின் விலை சுமார் ரூ ₹8000 குறைந்துள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை தொடர்ந்து ₹50,000 என்ற அளவிற்கு கீழே தான் உள்ளது.
நவம்பர் மாதத்தில் தங்கம் 4 சதவீதத்தை விட அதிக அளவில் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில், தங்கம் மற்றும் வெள்ளி விலை 2.5 சதவீதம் மற்றும் 3.5 சதவீதம் குறைந்துள்ளது. 2020 ஆகஸ்ட் 7 ஆம் தேதி தங்கம் 10 கிராமுக்கு 56191 ரூபாயாக இருந்தது, அதே மாதத்தில் ஆகஸ்ட் 25 அன்று தங்கம் 48,500 ரூபாயாக இருந்தது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, தங்கம் மீண்டும் இந்த அளவிற்கு வந்துள்ளது.
சென்னையில் இன்று, அதாவது நவம்பர் 26, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை 4,613 ரூபாயாக உள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கம் 36,904 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இன்று டெல்லியில் 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.44705 ஆகும். நேற்று 10 கிராமுக்கு ரூ.44824 ஆக இருந்தது, அதாவது இன்று விலை ரூ.119 குறைந்துள்ளது. இதேபோல், 24 காரட் தங்கத்தின் விலையும் 130 ரூபாய் குறைந்துள்ளது.
டெல்லி தவிர, மற்ற மெட்ரோ நகரங்களிலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. பெங்களூரில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .46200, கொல்கத்தாவில் ரூ .50070, மும்பையில் ரூ .49800
இன்று சந்தையில் வெள்ளி விலையும் குறைந்து, 1 கிலோ வெள்ளியின் விலை ரூ .64,800 ஆக உள்ளது. கிராமும் 65 ருபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) குறித்து நம்பிக்கையான தகவல்கள் வருவதை அடுத்து தங்கம் விலை குறைந்துள்ளது. அமெரிக்காவிலும் அரசியல் நிச்சயமற்ற தன்மை முடிந்துவிட்டது. இதுவே தங்கத்தின் விலை குறைய காரணம்.
கடந்த 6 மாதங்களில் நவம்பர் மாதத்தில் தங்கத்தின் விலை மிகவும் குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில், தங்கம் சுமார் 5% அதிகரித்தது. அடுத்த மாதத்தில், ஜூலை மாதத்தில் தங்கத்தின் விலை 9% அதிகரித்தது. ஆனால் இதற்குப் பிறகு, தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான குறைந்து வருகிறது. ஆகஸ்டில், தங்கம் 3% குறைந்தது. நவம்பரில் தங்கம் விலை 4% குறைந்தது.