Perfect Hug: கட்டிப்பிடிப்பதற்கான சரியான வழி! ஆராய்ச்சி சொல்லும் அறிவியல் காரணம்

தொடுதலுக்கும் ஒரு மொழி உண்டு. ஒருவர் உங்களைத் தொடும் விதம் எப்படி இருக்கிறது என்பதன் அடிப்படையில் அவருடைய உணர்வுகளைப் பற்றி சொல்ல முடியும். காதலில் மட்டுமல்ல, சாதாரணமாகக்கூட கட்டிப்பிடிப்பதற்கு என சில நெறிமுறைகள் உண்டு. இதற்காக ஆராய்ச்சி செய்து அறிவியல் ரீதியிலான காரணமும் கண்டறியப்பட்டுள்ளது தெரியுமா?  
 

1 /5

கட்டிப்பிடிப்பதற்கான சரியான வழி என்ன என்பதை கண்டறிய லண்டன் பல்கலைக்கழக உளவியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.  2,000 தன்னார்வலர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியின்படி, ஒருவரை சரியான முறையில் கட்டிப்பிடிக்க விரும்பினால், அது ஐந்து முதல் பத்து வினாடிகள் வரை நீடிக்க வேண்டும்.

2 /5

ஆராய்ச்சியின் படி, ஐந்து முதல் பத்து வினாடிகள் வரை கட்டிப்பிடிப்பது மிகவும் இனிமையானது, அதேசமயம் ஒரு வினாடிக்கு குறைவான அணைப்புகள் எந்த விசேஷ உணர்வையும் ஏற்படுத்தாது. இந்த ஆய்வில் கட்டிப்பிடிப்பது தான் காதலை வெளிப்படுத்தும் பொதுவான வழி என்று கூறப்பட்டது.  

3 /5

இந்த ஆராய்ச்சியில், ​​மக்கள் வெவ்வேறு நேர இடைவெளியில் வெவ்வேறு நேரங்களில் கட்டிப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இது அவர்களின் மனநிலையை எவ்வாறு பாதித்தது என்பது ஆராயப்பட்டது. ஒருவரை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உணர விரும்பினால், அவரை 5-10 வினாடிகள் இறுக்கமாக கட்டிப்பிடிக்க வேண்டும், அதே சமயம் நட்புரீதியிலான அணைப்புக்கு, ஒரே ஒரு நொடி போதும்.

4 /5

2018-ம் ஆண்டு கட்டிப்பிடிப்பதைப் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்யப்பட்டது. இடது புறத்தில் இருந்து அணைத்துக்கொள்வது மேலும் சிறப்பு உணர்வை ஏற்படுத்துகிறது என்று இந்த ஆராய்ச்சியின் முடிவு வெளிப்படுத்தியது. ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 2000 பேரிடம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். உணர்ச்சிவசப்படாமல் கட்டிப்பிடிக்கும்போது, ​​நாம் வலது கையை நோக்கி சாய்வதையும், ஆழ்ந்த உணர்வு மற்றும் பாசத்துடன் அணைத்துக் கொள்ளும்போது, ​​இடது கையை நோக்கி சாய்வதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

5 /5

உணர்வுகள் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இவை அனைத்தும் நமது மூளையின் நரம்பு மண்டலத்தில் நிகழ்கின்றன. மூளையின் வலது பக்கம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது, அதே நேரத்தில் இடது பக்கம் ஆழமான உணர்ச்சித் திசையை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது.