உங்கள் பேஸ்புக் ப்ரொபைலை யார் பார்த்தார்கள் என்பதை அறிய உதவும் Tech Tips..!!

உங்கள்  ப்ரொபைலை சமீபத்தில் யார் பார்த்தார்கள் என்பதை நீங்கள் அறிய விரும்பினால், அதை அறிய உதவும் சில வழிகளை அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக் மிகவும் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடக தளங்களில் ஒன்றாகும். பேஸ்புக் போன்ற தளங்களில் பிரபலமானவர்களை பலர் பாலோ செய்வது ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது. உங்கள் பாதுகாப்பை கருதி, உங்கள்  ப்ரொபைலை சமீபத்தில் யார் பார்த்தார்கள் என்பதை நீங்கள் அறிய விரும்பினால், அதை அறிய உதவும் சில வழிகளை அறிந்து கொள்ளலாம்.

1 /5

Facebook.com ஐப் பார்வையிடுவதன் மூலம் உங்கள் பேஸ்புக் கணக்கை வலைதளத்தில் ஏதேனும் ஒரு ப்ரவுசரை கொண்டு திறக்கவும். உங்கள் பேஸ்புக் பக்கம் அல்லது டைம்லைனில் நீங்கள் வந்ததும், ரைட் கிளிக் செய்யவும்

2 /5

இப்போது, ​​உங்கள் பேஸ்புக் சோர்ஸை காண ‘View Page Source’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அது திறந்ததும், ‘CTRL + F’ ஐத் தட்டவும். அப்பொழுது சேர்ச் பார் (search bar) தோன்றும்

3 /5

இப்போது, ​​search bar-ல் 'BUDDY_ID' என தட்டச்சு செய்து Enter பொத்தானைக் கிளிக் செய்க. இது முடிந்ததும், 'BUDDY_ID' க்கு அடுத்ததாக பல பேஸ்புக் ப்ரொபைல் ஐடிகள் உள்ள ஒரு பக்கத்துக்கு நீங்கள் செல்வீர்கள்

4 /5

நீங்கள் ஏதேனும் ஒரு ஐடியை காப்பி செய்து, புதிய டாப்-ஐ திறக்க வேண்டும், Facebook.com/15-digit ID,’ என்பதை தேட வேண்டும். உங்கள் ப்ரொபைலை பார்த்த நபரின் ப்ரொபைல்  தானாகவே உங்கள் திரையில் தோன்றும்.

5 /5

உங்கள் ப்ரொபைலை பார்த்த குறிப்பிட்ட ப்ரொபைலின் ஸ்கிரீன் ஷாட்டையும் நீங்கள் எடுக்கலாம்.