Shani Vakri 2023: சனி கிரகம் அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறது. 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 17ஆம் தேதியே 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சனி பெயர்ச்சி அடைந்தார். தற்போது ஜூன் 17ஆம் தேதி கும்ப ராசியில் சனிபகவான் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதன் பலன் தெரியும்.
சனி பெயர்ச்சி 2023: வேத ஜோதிடத்தின்படி, ஜூன் 17 சனிக்கிழமையன்று, சனி கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறது. மேலும் வரும் 6 மாதங்களுக்கு சனி இதே நிலையில் தான் இருப்பார். அத்தகைய சூழ்நிலையில், இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். பணக்கஷ்டம் தீரும். பகை விலகி நிம்மதி உண்டாகும்.
மேஷம் - உங்கள் திட்டங்களை சனி பகவான் இப்போது நிறைவேற்றுவார். வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. திடீர் மன உளைச்சல் உண்டாகும். வேகத்தை விட இந்த கால கட்டத்தில் விவேகம் அவசியம். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும்.
ரிஷபம் - வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் நல்ல இடமாற்றம் உங்களுக்கு கிடைக்கப்போகிறது. உங்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு அற்புதமான காலம். நினைத்த கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். பெண்களுக்கு வேலைகள் அதிகரிக்கும். பளு கூடுவதால் மனமும் உடலும் ஓய்வை எதிர்பார்க்கும்.
மிதுனம்- மிதுன ராசிக்காரர்களுக்கு வக்ர சனி பெரும் வெற்றியைத் தரும். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். சில வேலைகளை முடிப்பதால் மனநிம்மதி உண்டாகும்.
கடகம் - தொழில் வியாபாரத்தில் இருந்த இடைஞ்சல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க யோகம் உண்டாகும். இல்லத்தரசிகளுக்கு இந்த கால கட்டத்தில் மன நிம்மதி கிடைக்கும். மன உளைச்சல்கள் நீங்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களுக்கு சனிபகவான் 5 மாதங்களுக்கு நிறைய பலன்களைத் தருவார். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வருமானம் அதிகரிக்கும். வீடு-சொத்து வாங்கலாம். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். இந்த நேரம் சிலருக்கு சவாலாக இருந்தாலும், புரிந்துணர்வுடனும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும்.
கன்னி - வேலையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். எதிரிகளின் தொல்லை ஒழியும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
துலாம்- மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். மாணவர்களுக்கு திட்டமிட்ட கல்லூரிகளில் இடம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கையில் தாரளமாக பணப்புழக்கம் இருந்து வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு அமையும். உடலில் இருந்த நோய்கள் தீரும்.
விருச்சிகம் - பிரச்சினைகள் இடையூறுகளை எளிதில் சமாளிப்பீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள், வண்டி வாகனங்கள் வரும். ஊதிய உயர்வும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொடர்பு துறைகளில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார விசயங்கள், பணம் விசயங்களில் குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம்.
தனுசு - உயர்கல்வி பயில வெளிநாடு செல்லும் யோகம் அமையும். சுப விரயச் செலவுகள் அடிக்கடி வரும். வேலை விசயமாக வீடு மற்றும் ஊர் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற கடன் வாங்குதல் கூடாது. உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும்.
மகரம் - குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத தனவரவும் பொருள் வரவும் கிடைக்கும். கைக்கு வராத பணம் வந்து சேரும். வீடு, வாகனங்களை புதிதாக வாங்க சந்தர்ப்பம் அமையும். திடீர் திருப்பங்கள் ஏற்படும். பழைய நண்பர்களை சந்திப்பார்கள்.
கும்பம் - வேலையில் பளு கூடும். மன அழுத்தமும் உளைச்சலும் அதிகரிக்கும். தாய்மாமன்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். உறவினர்களிடம் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறையும் கவனமும் தேவை.
மீனம் - வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் அமையும். கடனாக கொடுத்த பணம் வீடு வந்து சேரும். வேலைக்காக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வரும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். முக்கிய விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது அவசியம்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.