பல உயரிய விருதுகளை வாங்கி குவித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டகால காதலனை வருகின்ற டிசம்பரில் திருமணம் செய்யவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முழு விவரம் இங்குப் பார்க்கவும்.
கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலனை அறிமுகம் செய்தார். காதலன் பெயர் மற்றும் போட்டோஸ் இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் பலவித கிசுகிசுப் பேச்சுகள் எழுந்தபோது ஏதும் பதிலளிக்காமல் மௌனமாக இருந்து வந்தார். ஆனால் காதலிப்பது குறித்து ஒரு நாளும் வெளிப்படையாகப் பேசியதில்லை. திடீரென்று இந்த செய்தியைக் கேட்டது மட்டுமல்லாமல் திருமண தேதி மற்றும் நடைபெறும் இடம் அனைத்தையும் முழு தகவலுடன் வெளியாகியிருக்கிறது, மேலும் இதுகுறித்து பார்ப்போம்.
கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரை கரம்பிருக்கத் தயாராகிவருகிறார். அந்தவகையில் தன் ரகசியமாகக் காதலித்து வந்த காதலன் யார் என்று விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீர்த்தி சுரேஷுக்கு 32 வயதாகும் நிலையில் அவருக்கு எப்போது திருமணம் என்று பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர், ஆனாலும் சில முணுமுணு பேச்சுக்கள் தொடர்ந்து வந்து வெளியில் கசிந்து வந்தது.
நடிகை கீர்த்தி சுரேஷிக்கு திருமணம் பற்றிய கிசுகிசுப் பேச்சுகள் வெளியில் வந்தபோது அது வதந்தி எனக் கீர்த்தி சுரேஷுக்கு நெருக்கமானவர் கூறினர்.
கீர்த்தி சுரேஷுக்கு வருகின்ற டிசம்பர் 11ம் தேதி கோவாவில் பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெறவுள்ளதாக உறுதியான தகவல் கூறப்படுகிறது
கீர்த்தி சுரேஷ் பள்ளியில் மலர்ந்த காதல் நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகுத் தன் காதலன் பெயரை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்குக் கல்யாண விருந்து அளிக்கப்போவதாகக் கூறப்படுகிறது.
கீர்த்தி சுரேஷ் தான் உயிருக்கு உயிராகக் காதலித்து வந்த காதலர் பெயர் ஆண்டனி தட்டில் எனவும் இருவரும் 15 வருடக் காதலுக்குப் பிறகு தற்போது திருமணம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் காதலன் ஆண்டனி சென்னையில் ஒரு நிறுவனத்தைச் சொந்தமாக நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார், அதுமட்டுமல்லாமல் பிரபல கதாநாயகர்களுடன் ஜோடியாகத் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிரபலங்களுடன் ஜோடியாக நடித்து பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளார்.