யூ டியூபராக மாறிய கீர்த்தி..! வெட்கத்தோடு வெளியிட்ட ஃபோட்டோ

சினேகாவுக்கு பிறகு சிரிப்பழகி பட்டத்துக்கு தகுதியான கீர்த்தி சுரேஷ், வெட்கப்பட்டு எடுத்த போட்டோகளை வெளியிட்டுள்ளார்

கீர்த்தி சுரேஷ், 2000 ஆண்டுகளிலேயே திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், பின்னர் வெள்ளித்திரை நாயகியாக உயர்ந்தார். 

1 /6

2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அவதாரம் எடுத்தார். தமிழில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இது என்ன மாயம் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.

2 /6

சிவகார்த்திகேயனுடன் இதுவரை 2 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். ரஜினி முருகன், ரெமோ ஆகிய இரண்டு படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் அடித்தது. 

3 /6

விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்த அவர், தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியானார். லேட்டஸ்டாக ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்தார்.

4 /6

இப்போது யூடியூபராகவும் மாறியிருக்கும் அவர், தன்னுடைய அப்டேட்டுகளை இந்த சேனலில் தெரிந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

5 /6

குட் லக் சகி பட புரோமோஷனில் பிஸியாக இருந்த கீர்த்தி சுரேஷ், ராம் சரணுடன் சேர்ந்து நாட்டு நாட்டு பாடலுக்கு ஆடிய ஆட்டம் இணையத்தில் வைரலாகியுள்ளது.  

6 /6

இவ்வளவு பிஸி ஷெட்யூலுக்கு இடையே தான், போட்டோஷூட்களையும் நடத்தி சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.