உணவே மருந்து என்பதை மெய்யாக்கும் உணவுப்பொருட்கள்

அன்றாட மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம். ஆனால் உங்களின் உணவுப்பழக்கத்தை நல்லமுறையில் வைத்திருப்பது மிகவும் எளிதான காரியம். இதுபோன்ற சில விஷயங்களை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள், இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

Healthy Diet: அன்றாட மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம். ஆனால் உங்களின் உணவுப்பழக்கத்தை நல்லமுறையில் வைத்திருப்பது மிகவும் எளிதான காரியம். இதுபோன்ற சில விஷயங்களை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள், இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

1 /5

உலர் பழங்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல சத்தான கூறுகள் உள்ளன, அவை குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பயனுள்ளதாக இருக்கும். அவற்றை உட்கொள்வது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.

2 /5

க்ரீன் டீயில் நல்ல அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கும் க்ரீன் டீ, கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

3 /5

இதயம் தொடர்பான பிரச்சனைகளை சீர் செய்வதில் அவக்கொடா மிகவும் அவசியமாகியது. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் சி, ஈ மற்றும் பி6 உள்ளது.

4 /5

உங்கள் அன்றாட வழக்கத்தில் முட்டைகளைச் சேர்ப்பதன் மூலம், உடலுக்கு புரதம் கிடைக்கும். முதியவர்களுக்கு முட்டை பல நல்ல ஊட்டச்சத்து நன்மைகளைக் கொடுக்கும். முட்டை இதயத்திற்கும் ஆரோக்கியமானது

5 /5

பச்சை இலைக் காய்கறிகள் எவ்வளவு ஆரோக்கியத்தை பலப்படுத்துகின்றன என்பதை குழந்தை பருவத்திலிருந்தே அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். செரிமான பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதோடு, மன அழுத்தத்தையும் குறைக்கும் பண்பைக் கொண்டவை பச்சை காய்கறிகள்