Kavya Maran: SRH மட்டுமல்ல.. இந்த ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணிக்கும் காவ்யாதான் ஓனர், தெரியுமா?

Kavya Maran: காவ்யா மாறனின் தாய், தந்தை, குடும்பம், படிப்பு, சொத்து என பல விஷயங்களை பற்றி பலர் அறிந்திருந்தாலும் அவர் குறித்த ஒரு விஷயம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. SRH அணியை தவிர மற்றொரு ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணிக்கும் அவர் உரிமையாளராக இருக்கிறார்.

Kavya Maran:ஆகஸ்ட் 2022 இல், கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா (CSA) SA20 ஐ துவக்குவதாக அறிவித்தது. 2023 ஆம் ஆண்டு முதல் சீசன் நடந்தது. ஈஸ்டர்ண் கேப் உட்பட தென்னாப்பிரிக்காவின் 6 வெவ்வேறு நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளுக்கான ஏலம் செப்டம்பர் 2022 இல் நடந்தது. சன் குழுமம் Eastern Cape அணியை வாங்கியது. 

1 /8

சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்த ஐபிஎல் 2024 போட்டிகளில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்த ஆண்டு அனைத்து போட்டிகளிலும் நன்றாக ஆடிய SRH அணி தோல்வியைத் தழுவியது. 

2 /8

தன் அணியின் முக்கிய பலமாக இருந்த காவ்யா மாறன் தோல்வியைத் தாங்க முடியாமல் கண் கலங்கினார். எனினும், கேமரா முன் சிரித்த அவர் பின்னால் திரும்பி கண்ணீரை துடைத்துக்கொண்டதும் சில கேமராக்களில் பதிவானது

3 /8

காவ்யா மாறனின் இந்த வீடியோவும், தோல்விக்கு பிறகு அவர் தனது அணி வீரர்களுக்கு இடையில் உரையாடி அவர்களை தேற்றியதும் இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தன.

4 /8

ஐபில் 2024 நடக்கும்போதும் அதன் பின்னரும் காவ்யா மாறனின் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. அவரை பற்றி மக்கள் அதிகம் தேடி வருகிறார்கள்.

5 /8

காவ்யா மாறனின் தாய், தந்தை, குடும்பம், படிப்பு, சொத்து என பல விஷயங்களை பற்றி பலர் அறிந்திருந்தாலும் அவர் குறித்த ஒரு விஷயம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. SRH அணியை தவிர மற்றொரு ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் அணிக்கும் அவர் உரிமையாளராக இருக்கிறார்

6 /8

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போலவே தென் ஆப்பிரிக்காவில்  SA20 என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. இந்த போட்டியில் மோதும் பல அணிகளில் சன் குழுமத்தின் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ண் கேப் (Sunrisers Eastern Cape) அணியும் ஒன்று. 

7 /8

7 ஆகஸ்ட் 2022 இல், கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா (CSA) SA20 ஐ துவக்குவதாக அறிவித்தது. 2023 ஆம் ஆண்டு முதல் சீசன் நடந்தது. ஈஸ்டர்ண் கேப் உட்பட தென்னாப்பிரிக்காவின் 6 வெவ்வேறு நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளுக்கான ஏலம் செப்டம்பர் 2022 இல் நடந்தது. சன் குழுமம் Eastern Cape அணியை வாங்கியது. 

8 /8

SA20 -ன் முதல் சீசனில் காவ்யா மாறனின் Sunrisers Eastern Cape அணி வெற்றிபெற்று சாம்பியன் ஆனது. இறுதிப்போட்டியில் Sunrisers Eastern Cape அணி Pretoria Capitals அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2024 ஆம் ஆண்டும் வெற்றிபெற்று சன்ரைசர்ஸ் இரண்டாவது முறையாக வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. கேப் டவுனில் நடந்த இறுதிப் போட்டியில் Durban's Super Giants அணியை காவ்யா மாறனின் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.