Sawan Shiv Kavadi To Shivdham : சிவபெருமானுக்கு ஆடி மாதம் மிகவும் பிரியமானது. இம்மாதத்தில் சிவபக்தர்கள் காவடியுடன் சிவஸ்தலங்களுக்கு காவடி எடுத்துச் சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
காவடியில் நீரை எடுத்துச் செல்லும் அவர்கள், திரும்பி வரும்போது, சிவாலயங்களில் இருந்து புனித கங்கை நீரை எடுத்து வருகின்றனர்.
சிவபெருமானுக்கு சாவான் மாதம் (தமிழில் ஆடி மாதம்) மிகவும் பிரியமானது. இம்மாதத்தில் சிவபக்தர்கள் காவடியுடன் சிவனின் தலங்களுக்குச் சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்துவிட்டு, அங்கிருந்து காவடியில் கங்கை நீரை நிரப்பி வீட்டிற்கு கொண்டு வருகின்றனர்.
காவடியில் கங்கை நீர் நிரப்பப்படுவது ஏன் தெரியுமா? தங்கள் கவலைகளை இறைவனிடம் அர்பணித்துவிட்டு, இறைவனின் ஆசீர்வாதமாக புனிதமான கங்கை நீரை காவடியில் சுமந்து தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்
தோளின் இரு புறங்களிலும் அன்னை பார்வதியையும் தந்தை சிவனையும் சுமக்கும் உணர்வுடன் காவடியை தோள்களில் சுமந்து செல்கின்றனர்
லட்சக்கணக்கான சிவபக்தர்கள் ஹரித்வார், கங்கோத்ரி மற்றும் பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபடுகின்றனர். பல நூறு கிலோமீட்டர்கள் வரை நடைபயணமாக காவடி எடுத்துச் செல்கின்ற்னர்
வட இந்தியாவில் சிவனுக்கு காவடி விசேஷமானது. தென்னிந்தியாவில் சிவகுமரன் முருகனுக்கு பலவிதமான காவடிகள் எடுக்கப்பட்டாலும், சிவனுக்கு நீர் காவடி மட்டும் தான் எடுக்கப்படும்
ஷ்ரவணர் என்ற மகன், தனது முதிய பெற்றோரை காவடியாக சுமந்துக் கொண்டு சென்றதை குறிக்கும் வகையில் உலகிற்கே அன்னையான உமையையும், அய்யன் உமையொருபாகனையும் சுமப்பதாக நினைத்து காவடியில் நீர் எடுத்துச் செல்கின்றனர்
பாற்காடலை கடைந்தபோது அதிலிருந்த விஷத்தை அருந்தி நீலகண்டன் என்று பெயர் பெற்ற சிவபெருமானின் உடல் மிகவும் உஷ்ணமாகிவிட்டது. உஷ்ணத்தைக் குறைக்க, தீவிர சிவபக்தரான ராவணன், கங்கை நீர் நிரப்பப்பட்ட காவடியைக் கொண்டு ஜலாபிஷேகம் செய்தார். அதன் பிறகு தான் காவடி யாத்திரை தொடங்கியது என்பது நம்பிக்கை
சிவனுக்கு பிடித்தமான ஆடி மாதத்தில் திங்கட்கிழமை நாட்களில் சிவஸ்தலங்களில் அதிலும் கங்கை நதியை தரிசித்து காவடியில் நீர் எடுத்துச் செல்பவர்களின் பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும்