Kalaignar 100: நான் நெருப்பு இல்லை... செருப்பு - ரஜினியிடம் சொல்லிய கலைஞர் - நினைவுக்கூர்ந்த கமல்!

 

 

 

 

 

 

1 /7

கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய கமல்ஹாசன்,"விஜயகாந்துடைய இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி முடித்த முதல்வர் ஸ்டாலினுக்கு என்னுடைய நன்றி. இந்த பண்பு அங்கிருந்து (கருணாநிதி) வந்தது" என்றார்.   

2 /7

"நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என சொல்லக்கூடிய தைரியம் அவருக்குண்டு" என கமல்ஹாசன் கருணாநிதியை நினைவுக்கூர்ந்து பேசினார். மேலும், அரசியலில் இருந்த போது சினிமாவை காத்தவர் கலைஞர் எனவும் பேசினார்.

3 /7

மேலும், ரஜினிக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை கமல்ஹாசன் நினைவுக்கூர்ந்து பேசினார். அதாவது, ரஜினி ஒருமுறை கருணாநிதியை 'நீங்கள் நெருப்பு, சார்' என்று கூறியுள்ளார், அதற்கு கருணாநிதி, 'நான் செருப்பு, வந்து என்னை அணிந்துகொள்ளுங்கள்' என சொன்னதாக கமல்ஹாசன் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.   

4 /7

தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த்,"ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு நாங்கள் ஒன்றாக பங்கேற்கும் நிகழ்ச்சி இது" என்றார்.

5 /7

1955ஆம் ஆண்டில் சம்பாதித்து வாங்கிய வீடுதான் தற்போதைய கோபாலபுரம் வீடு. அதில் ஒரு படிக்கட்டுக்கூட மாறாமல் இருக்கிறது. அதான் அவருடைய (கருணாநிதி) எளிமை. அதே போல் தான் ஸ்டாலின் அவர்களிடமும் நான் பார்கிறேன்" என்றார். 

6 /7

இந்நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சூர்யா, சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 

7 /7

விஜய், அஜித், சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை.