மிருகசீரிட நட்சத்திரத்திற்கு செல்லும் குரு! 3 ராசிக்காரர்களின் ஆட்டத்தை அடக்கும் குருபகவான்!!

ஆகஸ்ட் 19ம் தேதியன்று குரு, ரோஹிணி நட்சத்திரத்தில் இருந்து மிருகசீரிட நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்கள் நடக்கும், சில ராசிகளின் மரியாதை கெட்டுப்போகும், உடல்நிலை பாதிக்கப்படலாம்...

 

 

Guru Bagawan Retrograde: குரு பகவானின் இந்தப் பெயர்ச்சியானது, ரிஷப ராசிக்கு மிகவும் மோசமாக இருக்கும். மேலும் சில ராசிகளுக்கு மோசமான காலமாக இருக்கும் இந்தப் பெயர்ச்சியால் கஷ்டப்படப் போகும் ராசிகள் எவை என்பதை தெரிந்துக் கொள்வோம்...

1 /8

நவகிரகங்களும் இயக்கிக் கொண்டே இருக்கின்றன, சில கிரகங்கள் வேகமாக நகர்ந்தால், சில மிகவும் மெதுவாக நகர்கின்றன, கிரகங்களின் ஒவ்வொரு நகர்வும், அவை இருக்கும் ராசி மற்றும் நட்சத்திரங்களின் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. இவை நேரடியாக நமது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகங்களின் இயக்கத்தால் சிலருக்கு சுபமான பலன்கள் என்றால், சிலருக்கு  மோசமான பாதிப்பு ஏற்படலாம்

2 /8

நட்சத்திர மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களிலும் கிரகங்கள் இயங்கிக் கொண்டேயிருக்கின்றன. குரு பகவான் தற்போது மிருகசீரிட நட்சத்திரத்தில் இருக்கிறார்

3 /8

பெளர்ணமி நாளன்று குரு பகவான், ரோஹிணியில் இருந்து மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு பெயர்வதால் சிலருக்கு மிகவும் மோசமான பலன்கள் ஏற்படலாம் என ஜோதிடர்கள் கணிக்கின்றனர்

4 /8

மிருகசீரிட நட்சத்திரத்திற்கு அதிபதி செவ்வாய், செவ்வாயின் ஆதிபத்தியத்தில் இருக்கும் நடத்திரத்தில் குரு சஞ்சரிக்கும்போது அது பொதுவாக நல்ல பலன்களைக் கொடுக்காது. இருந்தாலும், பிற கிரகங்களின் இருப்பை வைத்து பார்க்கும்போது, ஆகஸ்ட் 19ம் தேதி தனது நிலையை மாற்றும். நவம்பர் 28 வரை மிருகசீரிட நட்சத்திரத்தில் வக்ர கதியில் இயங்கும் குருவின் இயக்க மாற்றத்தினால், சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்

5 /8

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும் குருவின் வக்ரகதி இயக்கமானது, ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்தும். மன அழுத்தம் அதிகரிக்கும், ஆரோக்கிய குறைவு ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் சுமூகமான சூழல் நிலவாது  

6 /8

துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் பிரச்னைகள் அதிகரிக்கலாம். ஏதேனும் ஒரு நஷடத்தை எதிர்கொள்ள நேரலாம். முதலீடுகளில் கவனம் தேவை, பண விரயம் ஏற்படும் என்பதால், அவற்றை சுப விரயமாக செய்து விட்டால் நலல்து. மன அழுத்தம் அதிகரிக்கலாம். இந்த நேரத்தில் வாயைக் கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது  

7 /8

குருவின் நட்சத்திர மாற்றத்தால் பணத்தை இழக்க நேரிடும் என்பதால் நிதி விஷயங்களில் கவனமாக இருக்கவும். தொழில் செய்பவர்கள் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும். வெளிவட்டாரத்தினரிடம் பழகும் போது கவனமாக இருக்கவும். வேலை செய்பவர்களுக்கு இது கடினமான காலமாக இருக்கலாம்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது